ரிலீசுக்கு முன்பே கங்குவாவின் வசூலை தாண்டிய புஷ்பா 2 - மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!

First Published | Nov 23, 2024, 9:58 PM IST

Pushpa 2 Collection : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் 2ம் பாகம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Pushpa 2

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதன் பிறகு இந்த மூன்று ஆண்டுகளாக வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் புஷ்பா படத்தின் இரண்டாம் பாக பணிகளை மட்டுமே தீவிரமாக கவனித்து வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன். பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலக அளவில் இந்த படம் வெளியாகிறது.

பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி; இருவர் குரலோடு விளையாடிய பாலசந்தர் - துணை நின்ற வாலி!

Kanguva

ஏற்கனவே கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் 38 மொழிகளில் சுமார் 11,500 திரையரங்குகளில் வெளியாகி இப்போது வரை ஓடி வரும் கங்குவா திரைப்படம் முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக திரையரங்குகளில் கங்குவா திரைப்படத்தின் பின்னணி இசை காதுகளை வலிக்கச் செய்யும் அளவிற்கு அதிக அளவில் இருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான இசையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Allu Arjun

கங்குவா திரைப்படம் உலக அளவில் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என்று பல மேடைகளில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தின் இசை மற்றும் திரைக்கதையின் தொய்வு உள்ளிட்டவை படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல்களை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், இன்னும் 250 கோடி ரூபாயை கூட எட்ட முடியாமல் தவித்து வருகிறது கங்குவா திரைப்படம். ஆனால் இதற்கிடையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. இது குறித்த சில தகவல்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Fahad Faasil

திரையரங்களில் வருவதற்கு முன்னதாகவே அதனுடைய பிரீ ரிலீஸ் வசூல் ஆக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 220 கோடியும், வட இந்தியாவில் 200 கோடியும், தமிழகத்தில் 50 கோடி ரூபாயும், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் சுமார் 50 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 140 கோடி ரூபாயும். Netflix தலத்தில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளதால் அங்கே ஒரு 275 கோடி ரூபாயும். சேட்டிலைட் உரிமம் 84 கோடி ரூபாயும், அதனுடைய இசை உரிமம் 67 கோடி ரூபாய்க்கும் இப்போது விற்பனையாகி உள்ள நிலையில் புஷ்பா 2 திரைப்படம் இதுவரை சுமார் 620 கோடி ரூபாய் வரை பிரீ ரிலீஸில் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விவாகரத்து குறித்து வீண் வதந்தி; 24 மணிநேரம் கெடு வைத்த ஏ.ஆர்.ரகுமான் - YouTubersக்கு செக்!

Latest Videos

click me!