பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி; இருவர் குரலோடு விளையாடிய பாலசந்தர் - துணை நின்ற வாலி!

Lyricist Vaali : பிரபல இயக்குனர் பாலசந்தர் திட்டமிட்டு பி.சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய இருவருடைய குரலோடு விளையாடியுள்ளார்.

P Susheela

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, உலக நாயகன் கமல் மற்றும் விவேக் என்று பல சிறந்த கலைஞர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் தான் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் என்பது பலர் அறிந்ததே. தமிழ் சினிமாவின் மிக சிறந்த மற்றும் அவுட் ஆப் பாக்ஸ் யோசிச்ச வெகு சில இயக்குனர்களில் பாலசந்தரும் ஒருவர். வழக்கமான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை வைத்து படங்கள் எடுத்து ஹிட்டாக்கி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களை வைத்து படங்களை மெகா ஹிட்டாகிய இயக்குனர் தான் பாலசந்தர். அவர் இயக்கத்தில் வெளியான எதிர்ச்சி நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம் போன்ற படங்கள் காலங்கள் கடந்தும் இன்றளவும் பலருக்கு பிடித்த படங்களாக இருந்து வருகிறது.

விவாகரத்து குறித்து வீண் வதந்தி; 24 மணிநேரம் கெடு வைத்த ஏ.ஆர்.ரகுமான் - YouTubersக்கு செக்!

Balachander

அந்த வகையில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் மனோரமா நடிப்பில் கடந்த 1972ம் ஆண்டு வெளியான படம் தான் வெள்ளி விழா. இந்த படத்திற்கு இசையமைத்தது பிரபல இசையமைப்பாளர் வி.குமார். மேலும் இப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும் வரிகளை எழுதியது வாலி தான். பாலசந்தர் ஸ்டைலில் இந்த படம் உருவாகியிருக்கும். ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற இரு பாடல்களில் பிரபல பாடகிகள் இருவரின் குரலோடு விளையாடி அசத்தியிருப்பார் பாலசந்தர். அது குறித்து தான் இப்பொது பார்க்கப்போகிறோம்.


Velli Vizha

பொதுவாக பி. சுசீலாவின் குரல் இலகுவான மென்மையான குரலாகவும், எல்.ஆர் ஈஸ்வரியின் குரல் கணீரென்ற சத்தத்தில் ஒலிக்கும் குரலாகவும் இருக்கும். அவர்களுக்கு அமையப்பெறும் பாடல்களும் அந்த வகையிலேயே அமைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வெள்ளி விழா திரைப்படத்தை பொருத்தவரை பாலச்சந்தரும், வாலியும் இணைந்து சுசீலா மற்றும் எல்.ஆர் ஈஸ்வரியின் குரலில் விளையாட நினைத்து உருவாக்கிய இரண்டு பாடல்கள் தான் "காதோடு தான் நான் பாடுவேன்" என்கின்ற பாடலும் "நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்" என்கின்ற பாடலும்.

Director Balachander

அதாவது அமைதியான மென்மையான குரலில் பாடும் சுசீலாவை "நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்" என்று ஒரு அழகிய பாடலில் பாட வைத்து அசத்தியிருப்பார் இசையமைப்பாளர் குமார் மற்றும் வாலிபக் கவிஞர் வாலி. அதேபோல எப்போது கணீர் என்ற தொனியில் பாடும் எல்.ஆர் ஈஸ்வரியை "காதோடு தான் நான் பாடுவேன்" என்கின்ற பாடலை பாட வைத்து இந்த திரைப்படத்தில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார்கள். உண்மையில் இந்த இரண்டு பாடல்களும் இன்றளவும் மக்கள் மத்தியில் விருப்பமான பாடலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கன்னட நடிகருடன் நடந்த திருமணம்! வாழ்த்த குவிந்த பிரபலங்கள்!

Latest Videos

click me!