விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கன்னட நடிகருடன் நடந்த திருமணம்! வாழ்த்த குவிந்த பிரபலங்கள்!

First Published | Nov 23, 2024, 6:09 PM IST

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை அக்ஷிதாவுக்கும் நடிகர் ப்ரீதம் சுரேஷுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
 

Akshitha Bopaiah

சன் டிவியில் ஒளிபரப்பான, 'அழகு' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகையான அக்ஷிதா. தன்னுடைய முதல் தொடரிலேயே ரேவதி, தலைவாசல் விஜய் போன்ற லெஜெண்ட்டரி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அக்ஷிதா, அடுத்தடுத்து.. ஹிட் சீரியல்களை குறிவைத்து நடித்தார்.

Akshitha Bopaiah and Preetham Suresh Wedding

கன்னட சீரியல்களை விட, தமிழ் சீரியல்கள் இவருக்கு அதிகம் கை கொடுத்ததால் முழுமையாக தமிழில் கவனம் செலுத்த துவங்கினார். கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது நாயகி வேதத்திலேயே பல சீரியல்களில் தோன்றினார்.

ஐயப்ப பத்தர்கள் உணர்வை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணியின் கானா பாடல்!

Tap to resize

Sun tv Serial Actress

அந்த வகையில் சன் டிவியில் டிஆர்பியில் பட்டையை கிளப்பிய 'கண்ணான கண்ணே' என்கிற தொடரில், கதாநாயகியின் தங்கை ரோலில் நடித்தார். இந்த சீரியல் தான், இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைய வைத்தது.

Vijay tv Tamizhum Saraswathiyum serial actress

இந்த சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர் தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக செயல்பட துவங்கிய, அக்ஷிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஃபாலோவர்ஸை வைத்துள்ளார்.

தளபதியின் பிரியாணி விருந்து! கண்டீஷன் போட்டு அனுமதிக்க பட்டார்களா விவசாயிகள்?

Akshitha Bopaiah wedding

இந்த சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் மேக்னா என்கிற ரோலில் நடித்தார். அதன் பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சீதா ராமம்' தொடரிலும் கதாநாயகியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார்.

Akshitha Bopaiah love marriage

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அக்ஷிதா சீரியல்களில் இருந்து விலகி, திருமணத்திற்கு தயாரானார். இந்நிலையில் இவருக்கும், பெங்களூரை சேர்ந்த எக்சிகியூடிவ் புரடியூசர் மற்றும் நடிகர் ப்ரீதம் சுரேஷ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சூர்யா படத்தை நாரடிப்போம்; உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்? நடிகரின் பேச்சால் பரபரப்பு!

Akshitha Bopaiah wedding Photos

குடும்ப முறைப்படி நடந்த இவர்களின் திருமண புகைப்படங்களை தற்போது, இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் அக்ஷிதா பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Latest Videos

click me!