தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்த மனோபாலா கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற "சதுரங்க வேட்டை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த திரைப்படம் தான் அவருடைய முதல் திரைப்படமாகும். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "பாம்பு சட்டை" என்கின்ற திரைப்படத்தையும் மனோபாலா தயாரித்து வழங்கி இருந்தார்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இணை இயக்குனராக, நடிகறாக, தயாரிப்பாளராக, டப்பிங் கலைஞராக இப்படி பல திறமைகளோடு வளம் வந்த மனோபாலா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு பிறகு தமிழில் மட்டும் "தீரா காதல்", "காசேதான் கடவுளடா", "ராயர் பரம்பரை" தொடங்கி இந்த ஆண்டு வெளியான "இந்தியன் 2" மற்றும் "அந்தகன்" வரை 20 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.