தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதை மயக்கிய இந்த ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ஷுமா குரேஷின் குழந்தை பருவ அரிய புகைப்படங்கள் இதோ.
29
Huma Qureshi Childhood Pics
டெல்லியைச் சேர்ந்த, நடிகை ஹுமோ குரேஷி, 1986 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்த இவர், படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் மேடை நாடகங்களில் கவனம் செலுத்தினார். நடிகை ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இவர், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக மும்பைக்கு சென்று திரைப்படங்களில் வாய்ப்பு தேட துவங்கினார்.
அந்த சமயத்தில் தான், இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான, 'கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்' படத்தில் மோனிஷா என்கிற துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய வேடம் என்றாலும், இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை குவித்தது.
49
Huma Qureshi Movies
எனினும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. பல போராட்டங்களை கடந்தே இன்று பாலிவுட் திரையுலகில் தன்னை ஒரு, நிலையான நடிகை என்று நிலைநிறுத்தி கொண்டார். பாலிவுட் திரையுலகை தாண்டி, மராத்தி, மலையாளம், இங்கிலீஷ், தமிழ் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
தமிழில் நடிகை ஹுமோ குரேஷி அறிமுகமான திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா'. இந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்துக்கு இணையான முதிர்ச்சியை நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களிலும் குடியேறினார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம்... மிகப்பெரிய வெற்றி பெற்றது.
69
Valimai Heroine Huma Qureshi
மேலும் இந்த படத்தில் நானா பட்நேக்கர், சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து ஹுமோ குரேஷி 'வலிமை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான, இந்த படத்தை போனிக்கபோர் சுமார் 150 கோடி செலவில் தயாரித்திருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இந்த படமும் சுமார் 234 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.
89
Huma Qureshi Bollywood Movies
இப்படி ரஜினிகாந்த் மற்றும் அஜித் இருவருக்குமே வசூலை கொடுத்த இரண்டு படங்களில் நடித்து ராசியான நடிகையாக பார்க்க பட்ட ஹுமோ குரேஷி, தற்போது முழுமையாக பாலிவுட் திரை உலகில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.
இந்த ஆண்டு மட்டும் இவரின் கைவசம் அடுத்தடுத்து நான்கு படங்கள் உள்ளன. நடிப்பில் படு பிஸியாக வலம் வரும் ஹுமோ குரேஷி, ஆரம்பகாலத்தில் தன்னை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள பல கஷ்டங்களை சந்தித்தவர். தற்போது இவரைத் தொடர்ந்து இவருடைய தம்பியும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 38 வயது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், கூடிய விரைவில் தன்னுடைய திருமண செய்தியை அறிவிப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.