இந்த விஷயத்தில் ரஜினி, விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்! 2024-ன் நம்பர் 1 ஹீரோவா மாறிட்டாரே!

First Published | Nov 23, 2024, 3:02 PM IST

2024-ன் முதல் பாதியில் வெற்றிப் படங்கள் குறைவாக இருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. விஜய், ரஜினி படங்களையே மிஞ்சி புதிய சாதனை அமரன் படம் படைத்துள்ளது.

Sivakarthikeyan becomes top hero of 2024

2024-ம் ஆண்டின் முதல் 6  மாதங்களில் தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த படமும் வெற்றிபெறவில்லை. அரண்மனை 4 வெளியான பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தங்கலான், ராயன், கோட், வேட்டையன் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. லப்பர் பந்து, மகாராஜா போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

Sivakarthikeyan becomes top hero of 2024

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. விஜய்யின் கோடி, ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் செய்யாத சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்துள்ளது. 

Tap to resize

Sivakarthikeyan becomes top hero of 2024

அதாவது அமரன் படத்தின் டிக்கெட்கள் புக் மை ஷோவில் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை அமரன் படத்தின் 4.55 மில்லியன் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. ஆனால் அதே நேரம் விஜய்யின் கோட் படத்திற்கு 4.5 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினியின் வேட்டையன் படத்திற்கு 2.7 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிக டிக்கெட் வேகமாக விற்று தீர்ந்தது அமரன் படத்திற்கு தான். எனவே மூலம் விஜய், ரஜினியை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக மாறி உள்ளார்.

Amaran movie

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து. 

Amaran

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த படம் இதுவரை உலகளவில் ரூ.250 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனினி கெரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் மாறி உள்ளது.

Sivakarthikeyan becomes top hero of 2024

இதற்கு முன்பு சிவகார்த்திகேயேன் படம் அதிகபட்சமாக ரூ.125 கோடி வசூல் செய்திருந்தது. சிவகார்த்திகேயனின் முதல் 200 கோடி வசூல் படமாக இந்த படம் மாறி உள்ள நிலையில் விரையில் இப்படம் ரூ.300 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

click me!