ஐட்டம் சாங்குக்கு கூட கமிட்டாகாத தமன்னா; தமிழ்ல மார்க்கெட் போச்சா? இப்போ என்ன செய்றாரு தெரியுமா?

Published : Nov 23, 2024, 01:39 PM ISTUpdated : Nov 23, 2024, 02:27 PM IST

Tamannaah Bhatia Movie Chance in Tamil Cinema : தமன்னாவிற்கு இப்போது தமிழில் மார்க்கெட் இல்லாத நிலையில் ஐட்டம் சாங்கிற்கு கூட கமிட்டாகாத போதிலும் இப்போது என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

PREV
16
ஐட்டம் சாங்குக்கு கூட கமிட்டாகாத தமன்னா; தமிழ்ல மார்க்கெட் போச்சா? இப்போ என்ன செய்றாரு தெரியுமா?
Tamannaah Bhatia, Tamannaah Bhatia Vijay Varma Love Relationships

Tamannaah Bhatia Movie Chance in Tamil Cinema : கேடி, வியாபாரி படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா அதன் பிறகு கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, வேங்கை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எனினும் சிறுத்தை, வீரம், பாகுபலி போன்ற படங்கள் மட்டுமே அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது. எனினும், தேவி 2, அரண்மனை 4 போன்ற த்ரில்லர் படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பெருசாக ஒர்க் அவுட்டாகாக தமன்னா ஹிந்தி, தெலுங்கு என்று இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

26
Tamannaah Bhatia, Tamannaah Bhatia Vijay Varma Love Relationships

தமிழ் சினிமாவில் பெரியளவில் ஹிட் கொடுக்காத தமன்னாவிற்கு கடைசியில் ஐட்டம் சாங் மட்டுமே சூப்பர் டூப்பர் ரீஸ் கொடுத்தது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம். படமும் ஹிட் கொடுக்க, பாட்டும் ரீல்ஸ் போடும் அளவிற்கு செம்மயா ஹிட் கொடுத்துச்சு. இதுல என்ன வருத்தம் என்றால் தனக்கும், தமன்னாவிற்கும் ஒரு காம்பினேஷன் கூட இல்லை என்று ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தே ஃபீல் பண்ணியிருப்பார்.

36
Tamannaah Bhatia Movie Chance in Tamil Cinema, Tamannaah Love Relationships

கடந்த ஆண்டு ஜெயிலர் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு தமிழ் படங்களில் கூட தமன்னா கமிட்டாகவில்லை. கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ் படம் அரண்மனை 4. முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்த படத்தில் தமன்னாவில் கேரக்டர் பாதியோடு முடிக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த தமன்னாவிற்கு இப்போது தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை.

46
Tamannaah Tamil Cinema, Tamannaah Tamil Movies, Tamannaah Item Song

2025ல் இதுவரையில் ஒரு படத்தில் கூட கமிட்டாகவில்லை. இப்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் Sikandar Ka Muqaddar என்ற ஹிந்தி படமும், Odela 2 என்ற தெலுங்கு படமும் உருவாகி வருகிறது. இந்த படங்கள் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Daring Partners  என்ற ஹிந்தி வெப் சிரீஸிலும் அவர் நடித்து வருகிறார்.

56
Tamannaah Bhatia filmography, Tamannaah

இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தென்னிந்திய மற்றும் வட இந்திய மொழி படங்களை வேறுபடுத்தி கூறினார். தென்னிந்திய சினிமா ரசிகர்களுடன் சிறப்பாக வேலை செய்கிறது. ஏனென்றால் அது அதிக ஆழமான கதைகளை சொல்ல தேர்வு செய்கிறது. தேன்னிந்திய மொழி படங்கள் புவியியல் இருப்பிடங்களை பற்றி அதிகளவில் பேசுகிறது. அதோடு அவற்றின் கதைகள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. அதனால் தான் அவர்களின் கதைகள் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

66
Tamannaah Bhatia Movie Chance in Tamil Cinema

மேலும் தென்னிந்திய சினிமாவுக்கு அடிப்படியே ரசிகர்களின் உணர்வுகள் தான். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று உணர்வுகளுடன் தொடர்புடையது. கதை சொல்லும் ஃபார்மேட்ஸ் மூலமாக ரசிகர்களின் உணர்வுகளை பற்றி கதை சொல்ல முனைகின்றன. அதுவும் தங்களுக்கு தெரிந்தவற்றை பற்றி மட்டுமே சொல்ல முயற்சிக்கிறார்கள். இது தென்னிந்திய சினிமாவிற்கு நன்றாக வேலை செய்கிறது என்று நான் நினைக்கிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories