
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சூர்யா. சினிமா பின்னணியிலிருந்து காலடி எடுத்து வைத்தவர். 1999 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் ஆரம்பித்து இப்போது 2024ல் கங்குவா வரை வந்துள்ளார். இதில் எத்தனையோ வெற்றி படங்களும், தோல்வி படங்களும் உண்டு. ஆனால், கங்குவா அளவிற்கு விமர்சனங்களை எதிர்கொண்டதா என்று கேட்டால் இல்லை என்று கூட சொல்லலாம்.
உலக சினிமாவில் இப்போதைக்கு ஹாட் டாப்பிக் எது என்றால் அது சூர்யாவோட கங்குவா படம் தான். படம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தை பற்றி பப்ளிச்சிட் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. படம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு, ரூ.2000 கோடி வசூல் குவிக்கும் என்றெல்லாம் சூர்யா கங்குவா குறித்து புரோமோட் செய்தார். படம் வெளியான பிறகு தான் அவர் பேசுனத்துக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்துருக்கு.
படமும் முதல் 20 நிமிடமும் ஓவரான சத்தத்துடன் இருந்துருக்கு. இது படம் முழுவதையும் தாக்கத்தை ஏற்படுத்தவே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதோடு, படத்தின் கதையும் சொல்லிக் கொள்ளுபடி பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் அழுத்தம் கொடுத்து எடுத்திருக்கலாம் என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா வெளியாகி இன்றுடன் 9 நாட்கள் ஆன நிலையில் முதல் 8 நாட்கள் வரையில் இந்தப் படம் ரூ.64.40 கோடி வரை மட்டுமே வசூல் குவித்திருக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறது. கங்குவாவிற்கு பிறகு அதனுடைய 2ஆம் பாகமும் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
கடைசியாக சிங்கம் 2 படம் தான் சூர்யாவிற்கு ஹிட் படமாக இருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்காத சூர்யா இப்போது சூர்யா44 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை பால் மில்கா பாக் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதோடு ரூ.600 கோடி பட்ஜெட் என்றும் படத்திற்கு கர்ணா என்று டைட்டில் கூட தேர்வு செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும், இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் திரௌபதி ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது கங்குவா கொடுத்த பெரிய அடி அவருக்கு ஆப்பு வைத்துள்ளது. அவரை நம்பி ரூ.600 கோடி செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். இதனால், கர்ணா படம் கிடப்பில் போடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஷாகித் கபூரின் புராணக் கதை படமான அஸ்வத்தாமா பட்ஜெட் காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடியாம்.
கங்குவாவின் நெகட்டிவ் விமர்சனம் கர்ணா படத்தை பாதித்துள்ளது. இதுவே கங்குவா விமர்சனம ரீதியாகவும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தால் கர்ணா படம் 2025 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது எல்லாமே தலைகீழா போச்சு. சூர்யா கையில் எந்த படமும் இப்போதைக்கு கையில் இல்லை. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சூர்யா இப்போது தன்னுடைய மார்க்கை இழந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.