சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வசந்த் வெற்றி - வைஷ்ணவி திருமணம் எப்போது? தீவிரமாக நடக்கும் ஏற்பாடுகள்!

First Published | Nov 23, 2024, 11:38 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவியின் திருமண தேதி குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
 

Ponni Serial Heroine wedding date

சமீப காலமாகவே சீரியல் நடிகர்கள், ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆலியா மானசா - சஞ்சீவ் , செந்தில் - ஸ்ரீஜா, சித்து - ஸ்ரேயா, உள்ளிட்ட சில நடிகர்கள் ஒன்றாக சீரியலில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 

siragadikka aasai serial hero

அதேநேரம் இன்னும் சில பிரபலங்கள், ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை வில்லை என்றாலும் நட்பு ரீதியாக அறிமுகமாகி, பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் ஷபானா, ஆரியனை தொடர்ந்து வெவ்வேறு சீரியல்களில் நடித்து, காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ள விஜய் டிவி நட்சத்திரங்கள் தான் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி.

சூர்யா படத்தை நாரடிப்போம்; உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்? நடிகரின் பேச்சால் பரபரப்பு!
 

Tap to resize

Vetri vasanth Engagement

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ஏராளமான சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இதை தொடர்ந்து வைஷ்ணவி - வெற்றி வசந்த் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களுடைய திருமணம், நவம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
 

Vetri vasanth and Vaishu wedding date

ஆனால் எந்த இடத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்கிற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த உள்ளார்களாம். எனவே திருமண வரவேற்பில் சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. 

ஐயப்ப பத்தர்கள் உணர்வை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணியின் கானா பாடல்!
 

Vetri vasanth Marriage

வெற்றி வசந்த் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய முதல் சீரியலும் இது தான். இவர் திருமணம் செய்து கொள்ள உள்ள வைஷ்ணவி ராஜா ராணி 2 சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி, தற்போது பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!