Actor Vijay
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனான இருக்கும், தளபதி விஜய் அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பப் புள்ளி வைத்து விட்டதால்... சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 69 ஆவது படமே, தன்னுடைய கடைசி படம் என தவெக கட்சி குறித்த அறிவிப்பு வெளியான போதே அறிக்கையில் தெளிவாகக் கூறி இருந்தார்.
Thalapathy vijay cinema place
பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக பார்க்கப்பட்ட விஜய்யின் விலகல், சில நடிகர்களுக்கு கொண்டாட்டம் என்றாலும், விஜய்யின் இடத்தை பிடிக்க உள்ளது யார்? என்கிற போட்டி கோலிவுட் திரை உலகில் தீவிரமடைந்துள்ளது. விக்ரம், சூர்யா, இருவரும் அந்த இடத்தை பிடிப்பார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரமின் 'தங்கலான்' தோல்வியை தழுவிய நிலையில், கங்குவாகவும் மண்ணை கவ்வியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சிவகார்த்திகேயனின் அமரன் மாஸ் வெற்றியை தன்வசமாக்கியது. இதுவரை சுமார் 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்து வருகிறது இந்த படம்.
சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வசந்த் வெற்றி - வைஷ்ணவி திருமணம் எப்போது? தீவிரமாக நடக்கும் ஏற்பாடுகள்!
Thalapathy vijay Give Party for Formers
இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் தற்போது தன்னுடைய 69-ஆவது படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது அரசியல் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடைபெற்றது.
Thalapathy Vijay Manadu
இந்த மாநாடு நடைபெற காரணமாக இருந்தவர்கள் அதற்கு இடம் கொடுத்த விவசாயிகள் தான். எனவே மாநாடு நடக்க காரணமாக அமைந்து, தன்னுடைய கட்சியின் மாநாட்டை நடத்த நிலம் வழங்கி உதவிய விவசாயிகளுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக, தற்போது விஜய் அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வந்த நிலையில், இன்று காலை 10 மணியில் இருந்து விவசாயிகளுக்கு பலவித பதார்த்தங்களுடன், பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டு வந்தது.
சூர்யா படத்தை நாரடிப்போம்; உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்? நடிகரின் பேச்சால் பரபரப்பு!
Cell Phone Not Allowed
இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக பிரத்தியேக பஸ் ஏற்பாடு செய்திருந்த விஜய், விவசாயிகளை தன்னுடைய கட்சி தொண்டர்கள் மூலம், விழுப்புரம் பகுதியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். இந்த விருந்துக்கு வரும் விவசாயிகளுக்கு, முக்கிய கண்டிஷன் ஒன்றையும் தளபதி போட்டுள்ளார். அதன்படி விவசாயிகள் யாரும் விருந்து நடைபெறும் இடத்திற்கு செல்போன் எடுத்து வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் வரும் பேருந்தில், அவர்களின் உடமைகளோடு சேர்த்து தொலைபேசியை வைத்துவிட்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.