ஹிட்டான தெலுங்கு படம்; 40 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஆச்சர்யம்!

First Published | Nov 23, 2024, 6:00 PM IST

Remake Movies : பொதுவாக ஒரு திரைப்படத்தை பிற மொழிகளில் ரீமிக்ஸ் செய்யும் வழக்கத்தை நாம் பார்த்திருப்போம் ஆனால் தெலுங்கு மொழியில் வெளியான ஒரு படம் சுமார் 40 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது.

Bala Nagamma

தமிழ் மொழியை போலவே தெலுங்கு மொழி திரைப்படங்களும் உலக அரங்கில் பெரும் வரவேற்பை தொடர்ச்சியாக பெற்று வருகிறது 100 ஆண்டுகளைக் கடந்து தமிழ் சினிமா பயணித்து வருவதைப் போல தெலுங்கு சினிமாவும் 100 ஆண்டுகளை கடந்து பயணித்து வரும் ஒரு மிகச்சிறந்த திரையுலகமாகும் இந்நிலையில் கடந்த 1942 ஆம் ஆண்டு சி பிள்ளையா என்பவருடைய இயக்கத்தில் கவி என்பவருடைய எழுத்தில் கோவையை சேர்ந்த எஸ் எஸ் வாசனை தயாரிப்பில் நடிகை காஞ்சனா மற்றும் நடிகர் சுபா ராவ் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பால நாகம்மா சாபத்திற்கு உள்ளான ஒரு இளவரசியின் கதை தான் இது.

இறப்புக்கு பின் வெளியான 20 படங்கள்; கோலிவுட்டில் 69 வயது வரை கலக்கிய நடிகர் யார் தெரியுமா?

Bala Nagamma Movie

1940 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்குகிறது எஸ் எஸ் வாசன் உடைய தொலைநோக்கு பார்வை இந்த திரைப்படத்தை மக்கள் ஆச்சரியப்படும் வண்ணம் எடுக்க வைக்கிறது 1940 களிலேயே மாயாஜாலங்கள் கலந்த திரைப்படமாக இது வெளியானது மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல இந்த திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை காஞ்சனா இந்திய சினிமாவில் ஐகானாக இன்றளவும் பலரால் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படம் மீண்டும் செய்யப்பட்டது.

Tap to resize

Bala Nagamma Movie

ஆனால் ரீமேக் செய்யப்பட்டது உடனடியாக அல்ல கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது கடந்த 1981 ஆம் ஆண்டு சங்கர் என்பவருடைய இயக்கத்தில் ஜெகதீசன் என்பவர் திரைக்கதை எழுத சரத்பாபு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவருடைய நடிப்பில் இளைய ராஜாவின் இசையில் இந்த திரைப்படம் வெளியானது கதையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பால நாகம்மாவாக ஸ்ரீதேவி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் கே ஆர் விஜயா நாகதேவியாகவும் சரத்பாபு விஜய வருமானாகவும் பிரபல வில்லன் நடிகர் அசோகன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Actress Sridevi

அது மட்டுமல்ல 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் தெலுங்கு மொழியிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது 19 82 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி இதே திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியானது அந்த திரைப்படத்திற்கும் சங்கர்தான் இயக்குனர் சரத்பாபு மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முதல் சாய் பல்ல்வி வரை; தென்னிந்திய ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Latest Videos

click me!