
சினிமாவில் நடிகைகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதே அரிதான விஷயம் தான். அப்படி இருக்கையில் சர்ச்சை என்றாலே முதலில் இந்த நடிகையின் பெயர் தான் நியாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், பின்னாளில் திருமண வாழ்க்கையில் கோட்டைவிட்டார். இவர் ஒன்றல்ல மொத்தம் 3 திருமணங்கள் செய்துகொண்டார். ஆனால் அந்த 3 திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இது போதாதென்று தந்தையுடன் சண்டையிட்டு தற்போது குழந்தைகளுடன் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அவரின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த நடிகை வேறு யாருமில்லை... வனிதா விஜயகுமார் தான். நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா. இவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆனால் இவர் ஹீரோயினாக பேமஸ் ஆனதை விட சர்ச்சைகளில் சிக்கி தான் அதிகம் பேமஸ் ஆகி இருக்கிறார். சினிமாவில் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வனிதா, கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதால் சினிமாவை விட்டு விலகினார்.
வனிதாவின் முதல் கணவர் பெயர் ஆகாஷ். அவரும் ஒரு நடிகர் தான். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் இருக்கிறார். வனிதா - ஆகாஷ் ஜோடியின் திருமண வாழ்க்கை 7 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா விஜயகுமார். ஆகாஷை பிரிந்த அந்த வருடமே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. இது பிடிக்காததால் அவரது மகன் ஸ்ரீஹரி தந்தை ஆகாஷ் உடன் சென்றுவிட்டார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா; வறுத்தெடுக்கப்பட்ட அர்னவ் - இறுதியில் என்ன ஆச்சு?
நடிகை வனிதா விஜயகுமார், ராஜன் என்பவரை இரண்டாவதாக கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ஜோவிகா மற்றும் ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர். வனிதாவின் இந்த திருமண வாழ்க்கையும் ஐந்து ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இப்படி அடுத்தடுத்த திருமணங்கள் விவாகரத்தில் முடிந்ததால் அப்செட்டில் இருந்த வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் வனிதாவை வீட்டை விட்டே துரத்திவிட்டார் விஜயகுமார்.
பின்னர் மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா, சில ஆண்டுகள் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் சைலண்டாக இருந்த நிலையில், அவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்று அந்நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்த வனிதா, சண்டைக்கோழியாக வலம் வந்தார். அந்த சீசன் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருப்பதற்கு வனிதாவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவு கண்டெட் கொடுத்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை காதலிப்பதாக அறிவித்த வனிதா, அவரை திருமணமும் செய்துகொண்டார். வனிதாவின் இந்த திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. குடித்துவிட்டு கலாட்டா செய்ததால் பீட்டர் பாலை அடித்து துரத்திவிட்டார் வனிதா.
இப்படி மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தாலும் சினிமாவில் அடுத்தடுத்த உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார் வனிதா. அவருக்கு அடுத்தபடியாக அவர் மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டு பேமஸ் ஆன பின்னர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் வனிதா குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... தனுஷை மிஞ்சிய வனிதாவின் மகள் ஜோவிகா; எந்த விஷயத்தில் தெரியுமா? தெரிஞ்சா கண்டிப்பா வாழ்த்து சொல்லுவீங்க!