யார் இந்த இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்?

Published : Nov 24, 2024, 10:55 AM ISTUpdated : Nov 28, 2024, 01:43 PM IST

Aakash Baskaran Wedding Function : ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரலங்கள் கலந்து கொண்ட நிலையில் தனுஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் இருவருக்கும் என்ன உறவு என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
15
யார் இந்த இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்?
Dhanush at Aakash Baskaran Wedding Function

Aakash Baskaran Wedding Function : தனுஷ் தயாரிப்பில் உருவான படங்களில் நானும் ரௌடி தான் படமும் ஒன்று. இந்தப் படத்தின் காட்சிகளை நயன்தாரா  தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தியது தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. 3 வினாடிகள் பயன்படுத்தியதாக குறிப்பிட்ட நயன்தாரா நானும் நௌடி தான் பட காட்சிகளை 37 வினாடிகள் பயன்படுத்தியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. எது எப்படியோ தனுஷ் தன்னுடைய அனுமதி இல்லாமல் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

25
Aakash Baskaran

கோலிவுட்டில் இந்த சண்டை தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. இருவருமே சந்திக்காமல் மோதிக் கொண்ட நிலையில் ஒருவருக்கொருவர் நேரடியாக சந்தித்த சம்பவம் ஒன்றும் நடந்தது. அது தான் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்.

35
Dhanush and Nayanthara, Aakash Baskaran Marriage

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இப்போது தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கிறார். இப்போது தனுஷ் இட்லி கடை படத்தை இயக்க, அந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

45
Aakash Baskaran Marriage Function, Dhanush

இட்லி கடை படத்தில் நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே இருவரும் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தான் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். அவர் மட்டுமின்றி நயன்தாராவும் கலந்து கொண்டார்.

55
Idly Kadai Producer Aakash Baskaran

இருவரும் ஒரே வரிசையில் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் நயன் தாரா படையப்பா நீலம்பரி மாதிரி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். ஆனால் தனுஷ் அமைதியாக வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தார். தற்போது இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பேங்காக்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இட்லி கடை படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories