
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய 'மத கஜ ராஜா' திரைப்படத்தில் நடிகர் விஷால் தான் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2013-ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது.
மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை சதா ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு வேடத்தில் தோன்றி டான்ஸ் ஆடியுள்ளார். இந்நிலையில் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு, விஷாலின் முயற்சி காரணமாக சுமார் 12-ஆண்டுகளுக்கு பின் அதுவும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து ரிலீஸ் ஆக உள்ளது. போதும் இளம் ரசிகர்களை கவரும் விதத்தில், கிளுகிளுப்பான படங்களை எடுப்பதில் வல்லவரான சுந்தர் சி-யின் இந்த படம், பல வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனாலும், தற்போதைய இளம் ரசிகர்கள் வைப்பில் தான் இருக்கும் என கூறப்படுகிறது.
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு! காத்திருக்கும் செம்ம சம்பவம்!
ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள, இந்த அப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. இந்த இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, சுந்தர் சி, விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் நடித்த நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஆடியோ லாஞ்சுக்கு வந்த விஷால், மிகவும் மெலிந்து... முகம் வெளிறி போய், கண்கள் சிவந்து, கைகள் நடுக்கத்துடன் காணப்பட்டார். எப்போதும், செம்ம ஸ்டைலிஷாக வீர வசனம் பேசிக்கொண்டு உலா வரும் விஷாலா? இப்படி என ரசிகர்கள் மட்டும் இன்றி பத்திரிக்கையாளர்களும் பதறி போனார்கள்.
விஷால் வைரல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்... சுந்தர் சி-காக மட்டுமே இந்த நிலையிலும் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, சில வதந்திகளும் பரவ துவங்கிய நிலையில், விஷால் வைரல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுளளதாகவும், அவர் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அப்போலோ மருத்துவர் அறிவுறுத்திய அறிக்கை ஒன்றும் வெளியானது.
குழந்தை பெற்றபின் கும்முனு மாறிய அமலா பால்! மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
ஆனால் இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம்... இயக்குனர் பாலா தான் என வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அதாவது இயக்குனர் பாலா இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அவன் இவன்'. இயக்குனர் பாலா அந்த சமயத்தில், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் அவர் என்ன சொன்னாலும் அதை நடிகர்கள் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி தான் விஷால் பார்வை நார்மலாக இருக்க கூடாது, கொஞ்சம் மாற்றம் வேண்டும் என, பாலா கூறியதால் அவர் பார்வையை மாற்றுவதற்கு... இழுத்து தைக்க பட்டது.
இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், விஷாலுக்கு பார்வையை சீர்படுத்தப்பட்டாலும்... 'அவன் இவன்' டப்பிங் போது அவரது பார்வை தானாகவே (ஒன்றரை கண்) போல் மாறிவிடும். இதை பாலாவே தன்னுடைய பேட்டிகளில் கூறி உள்ளார். அதே சமயம் இங்கு தான் விஷாலுக்கு பிரச்னையும் துவங்கியது. அடிக்கடி, ஒற்றை தலைவலி இவருக்கு வந்தது. பல சிகிச்சைகள் எடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், சில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளானார். இதன் பாதிப்பே இன்று விஷால், கண் நடுக்கத்துடன் காணப்படுகிறார் என பகீர் தகவலை கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதி தேவியாக மாறி பிரமிக்க வைத்த காஜல் அகர்வால்! 'கண்ணப்பா' பட போஸ்டர் வைரல்!