Tamil cinema Actress Amala Oaul
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக இருந்தாலும் சர்ச்சை நாயகையாக அறியப்பட்டவர் தான் அமலா பால். குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த, 'சிந்து சமவெளி' திரைப்படம் இவருக்கு எதிராக பல திரைப்பட ரசிகர்களையும், இந்த திரைப்படம் ஒரு கலாச்சார சீரழிவு என கூறி சமூக ஆர்வலர்களும் போர் கொடி தூக்கினர். பொதுவாக பாசிட்டிவ் விமர்சனங்களை விட, நெகட்டிவ் விமர்சனம் மிகவும் வேகமாக ஒருவரை பிரபலமாக்கி விடும், அப்படி தான் அமலா பாலும் நெகட்டிவ் விமர்சனம் மூலமாக பிரபலமானார்.
Amala Paul Latest Photo Shoot
இதை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் அமலா பால் விதாரத்துக்கு ஜோடியாக நடித்த 'மைனா'. இவர் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை ஒரேயடியாக மாற்றி அமைத்தது. ஒரு கட்டத்தில் தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்த அமலா பால், முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே, கடந்த 2014ம் ஆண்டு தன்னை வைத்து தலைவா, தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூன்றே வருடத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது.
பார்வதி தேவியாக மாறி பிரமிக்க வைத்த காஜல் அகர்வால்! 'கண்ணப்பா' பட போஸ்டர் வைரல்!
Amala Paul With Son
விவாகரத்துக்கு பின்னர் அமலா பால் தொடர்ந்து திரையுலக வாழ்க்கையில் சரிவை சந்திக்க துவங்கினார். இவர் கதையின் நாயகியாக நடித்த, ஆடை திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்ட பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. அதே போல் 'ஆடை' படத்தில் துணிந்து சில போல்டான காட்சிகளில் இவர் நடித்தது, இவருக்கே பேக் பயர் அடித்தது. சில படங்களில் இருந்து கூட அமலா பால் நீக்கப்பட்டார்.
Amala Paul Family Photo Shoot
இதன் காரணமாக அமலா பால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதற்காக ஆன்மீக பாதையை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த அமலா பால் 2 மாதம் கர்ப்பமாக இருக்கும் அவரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் தான், அமலாபாலின் திருமணம் நடந்து முடிந்தது.
அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், இவருக்கு இலை என பெயர் சூட்டினர். அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், இப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொண்ட ட்ரடிஷனல் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!