வடிவேலுவின் கம்பேக் திரைப்படம்... ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி வந்தாச்சு - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Oct 17, 2022, 03:07 PM IST

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

PREV
14
வடிவேலுவின் கம்பேக் திரைப்படம்... ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி வந்தாச்சு - எப்போ ரிலீஸ் தெரியுமா?

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் அதிக அளவில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கெல்லாம் கடந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது புல் பார்மில் மீண்டும் சினிமாவில் கெத்தாக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் வைகைப்புயல்.

24

வடிவேலுவின் கம்பேக் குறித்தான அறிவிப்பு வெளியானதும், அவர் கமிட் ஆன முதல் படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கிய சிராஜ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வடிவேலு உடன் சிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... யாரும் எதிர்பார்க்காத செம்ம ட்விஸ்ட்.? ரகசிய திருமணம் உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

34

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

44

அதன்படி இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற அக்டோபர் 24-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிட உள்ளார்களாம். நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு நடித்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்...  myna nandhini : கணவருக்கு முத்தமிட்டபடி சூப்பர் கூல் லுக்கில் மைனா நந்தினி...

Read more Photos on
click me!

Recommended Stories