myna nandhini : கணவருக்கு முத்தமிட்டபடி சூப்பர் கூல் லுக்கில் மைனா நந்தினி...

Published : Oct 17, 2022, 02:48 PM ISTUpdated : Oct 17, 2022, 02:52 PM IST

மைனா நந்தினி தனது கணவரின் கன்னத்தில் முத்தமிட்டபடி கொடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

PREV
17
myna nandhini  : கணவருக்கு முத்தமிட்டபடி சூப்பர் கூல் லுக்கில் மைனா நந்தினி...
myna nandhini

சின்னத்திரை மூலம் பிரபலமானவர்கள் பலருண்டு அவர்களில் ஒருவர் தான் மைனா நந்தினி, தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர்.

27
myna nandhini

இவர் சுசீந்திரம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழுவில் முதல் முறையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அருள்நிதி நடித்த வம்சம் படத்தில் தோன்றியிருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாயகியின் தோழியாக இவன் நடித்திருப்பார். 

37
myna nandhini

இதன் பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் நந்தினி. விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த ரோல் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு...sardar : நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் லைலா..கார்த்தியுடன் க்யூட் போட்டோஸ்

சில திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். 

47
myna nandhini

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார் மைனா நந்தினி. முன்னதாக திருமணமாகி தனது கணவரை இழந்த இவர் சீரியல் நடிகர் யோகேஸ்வரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்கிற மகன் உள்ளார்.

57
myna nandhini

விஜய் டிவி பிரபலமான இவர் அவ்வப்போது தன் குடும்பத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் தனது பெயரில் யூடியூப் ஒன்றையும் உருவாக்கி மகன் துருவின் சேட்டைகளையும் அப்லோடு செய்து வருகின்றனர்.

67
myna nandhini

விஜய் டிவிகள் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 -ல் இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக முதல் வாரத்தில் உள் நுழைந்துள்ளார். இது  இவருக்கு மேலும் பிரபலத்தைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..rakul preet singh : சிவப்பு வண்ண உடையில் மனதை மயக்கும்..ரகுல் ப்ரீத் சிங்..நியூ லுக்

77
myna nandhini

சமீபத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற இவர்களது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வந்தது. இந்நிலையில் மைனா நந்தினி தனது கணவரின் கன்னத்தில் முத்தமிட்டபடி கொடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories