திரிஷா முதல் அனுஷ்கா வரை... திருமண வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் முன்னணி நடிகைகளின் லிஸ்ட் இதோ

Published : Oct 17, 2022, 02:34 PM IST

35 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் முன்னணி நடிகைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
113
திரிஷா முதல் அனுஷ்கா வரை... திருமண வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் முன்னணி நடிகைகளின் லிஸ்ட் இதோ

திரையுலகை பொறுத்தவரை நடிகர்களின் லைஃப் டைம் என்று பார்த்தால் அது அதிக ஆண்டுகள் நீடிக்கும். அதேவேளையில் நடிகைகளுடைய லைஃப் டைம் என்பது குறுகிய கால ஒன்றாகும். அதிகபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தான் அவர்களால் பட வாய்ப்புகளைப் பெற முடியும். அவற்றைத் தாண்டி விட்டால் வயதைக் காரணம் காட்டி ஒதுக்கிவிடுவார்கள்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் 30 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்துகொள்வார்கள். அதற்கு முன் திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் ஓரம்கட்டி விடுவார்கள் என பயந்து நடிகைகளே அந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை. இருப்பினும் 30 முதல் 35 வயதுக்குள் பெரும்பாலும் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவர். அந்த வகையில் 35 வயதைக் கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் முன்னணி நடிகைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

213

அனுஷ்கா

கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் அனுஷ்கா. இவருக்கு தற்போது 40 வயது ஆகிவிட்ட போதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸ் உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தொழிலதிபரை இவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அவையெல்லாம் வதந்திகளாக கடந்து சென்றன.

313

கிரண் 

நடிகை கிரண், தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். அஜித், விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும், அவர்களுடன் கவர்ச்சி நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்திழுத்த இவருக்கு தற்போது 41 வயதாகிறது. இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

413

தபு

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தவர் தபு. பின்னர் பாலிவுட்டுக்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்த இவர், 50 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

513

பூனம் பஜ்வா

ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இவர் தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2 போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை இவரால் எட்ட முடியவில்லை. தற்போது 37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத இவர் தற்போது ஒருவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

613

திரிஷா

மிஸ் சென்னை பட்டத்தை வென்ற கையோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த திரிஷா சுமார் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வனில் கூட குந்தவையாக நடித்து பாராட்டுக்களை பெற்ற திரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. இடையே ராணா, வருண்மணியன் ஆகியோருடன் காதலில் விழுந்த திரிஷாவுக்கு அந்த காதல்களெல்லாம் தோல்வியில் முடிந்ததால் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார் திரிஷா.

713

இலியானா

விஜய் - ஷங்கர் கூட்டணியில் வெளியான நண்பன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் இலியானா. இவருக்கு தற்போது 36 வயது ஆகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த இலியானா அண்மையில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்து தற்போது சிங்கிளாக உள்ளார்.

813

டாப்ஸி

தமிழில் தனுஷுடன் ஆடுகள், அஜித் உடன் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இருப்பினும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் மதியாஸ் என்கிற பேட்மிண்டன் வீரரை காதலித்து வருகிறார்.

913

சுருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசனுக்கு தற்போது 36 வயது ஆகிறது. இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பாலிவுட், டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி இவர் சாந்தனு என்கிற டூடுல் ஓவியக் கலைஞரை காதலித்து வருகிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

1013

நக்மா

நடிகை நக்மா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்து பாப்புலர் ஆனார். நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரியான இவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. இருந்து அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

1113

கோவை சரளா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. ஏராளமான முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. இருப்பினும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

1213

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு தற்போது 37 வயது ஆகிறது. இருந்தும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார். இடையே நடிகர் விஷாலை காதலித்த வரலட்சுமி, சில ஆண்டுகளிலேயே பிரேக் அப் செய்து பிரிந்தார்.

1313
Andrea Jeremiah

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அனிருத் உடன் காதல் சர்ச்சையில் சிக்கி, இவர்கள் இருவரும் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்களெல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'தீ இவன்' படத்தில் நவசர நாயகன் கார்த்திக்குடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..!

Read more Photos on
click me!

Recommended Stories