பாலிவுட் மூலம் அறிமுகமான லைலா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரை உலகை அடுத்தபடியாக தமிழில் அறிமுகமானார். முதன் முதலில் கள்ளழகர் என்னும் படத்தில் விஜயகாந்த் உடன் தோன்றியிருந்தார்.
இவர் நடித்த ஹிட் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தவர் லைலா. இதை அடுத்து பாலாவின் பிதாமகன் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. சூர்யாவுக்கு ஜோடியாக வரும் லைலாவின் முதல் பாதியும் சரி, இரண்டாம் பாதியும் சரி பார்ப்பவர்களை பெரிதாக கவர்ந்தது.
இந்த படம் இவருக்கு ஃபிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து கம்பீரம், ஜெயசூர்யா, உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பரமசிவம், திருப்பதி, மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
2006 இல் வெளியான திருப்பதி படத்தில் தான் இவர் இறுதியாக தோன்றியிருந்தார். அதே ஆண்டு தொழிலதிபரான மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 8 வருடங்கள் அவருடன் காதல் உறவில் இருந்தார் லைலா.
sardar
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோவன் மற்றும் ரோமன் என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமா திரை உலகில் இருந்து ஒதுங்கி விட்டார் லைலா.
sardar
இந்நிலையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்தார் படம் மூலம் மீண்டும் ரீ - என்ட்ரி கொடுக்கிறார் லைலா. முன்னதாக கடந்த ஆண்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர், கோகுலத்தில் சீதை உள்ளிட்டவற்றில் பங்கேற்று இருந்தார்.
sardar
லைலாவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எஸ்.பி மித்ரன் இயக்கும் இந்த படம் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. உளவாளி குறித்த கதைக்களம் தான் இந்த படத்தின் கதை என கூறுகிறார் கார்த்தி.
sardar
அதோடு போலீசாக இருக்கும் வேடம் மட்டுமே ஒரிஜினல் மற்ற வேடங்கள் அந்த போலீஸ் போடுவது என படத்தின் கதையை அப்பட்டமாகவும் தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதையொட்டி ப்ரோமோஷன் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கார்த்தி லைலாவுடன் ப்ரோமோஷன் பணிகளின் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.