Lyricist Vaali
ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனருக்கு எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ... அதே அளவிலான முக்கியத்துவம் இசையமைப்பாளருக்கும் கொடுக்கப்படுகிறது. இசையமைப்பாளர் தன்னுடைய பாடல்களுக்கு முழுக்க முழுக்க நம்பி இருப்பது பாடல் ஆசிரியர்களை தான். அதிலும் குறிப்பிட்ட பாடலாரிசியர்கள் எழுதும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி மிகவும் பிரபலமான பாடலாரிசியர்களில் இருவர் தான் வாலி.
Vaali and MS Vishwanathan
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்து, நண்பரின் உதவியால் சென்னைக்கு வந்து... தயாரிப்பாளரை தேடி தேடி சென்று வாய்ப்பு கேட்டு, பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்த பின்னர் தான் வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்திற்கு இவர் பாடல் எழுதிய பின்னர், பல தயாரிப்பாளர்கள் இவரை போட்டி போட்டு பாடல் எழுத வைத்தனர். அதே போல் வாலியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு உண்டு.
கண்டெண்டுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ண போகிறாரா இர்பான்? தொப்புள் கொடி வெட்டும் வீடியோவால் சர்ச்சை!
NS Krishnan
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், என மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ள வாலி, பல பேட்டிகளில் தன்னை பற்றியும் தான் கேள்வி பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தஞ்சை இராமையாதாஸ், பாடலை திருவள்ளுவர் எழுதிய 1330 குரலை விட உயர்வானது என என்.எஸ்.கிருஷ்ணன் பகிர்ந்த தகவலை கூறியுள்ளார்.
Ramaiah Dass
இதுகுறித்து வாலி கூறுகையில், " தஞ்சை இராமையாதாஸ் பற்றி நான் கேள்வி பட்ட ஒரு தகவலை கூறுகிறேன். என் எஸ் கிருஷ்ணன் ஒரு பாடலைப் பற்றி சொல்லி, அது 1330 திருக்குறளை விட மிகவும் உயர்ந்தது என சொன்னார். அது பலருக்கு தெரியாது. இது மிகவும் சாதாரண பாடல் தான், கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் 'சிங்காரி' படத்துக்காக எழுதிய
ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா ?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுர வாங்குமா பரோட்டா ?
அஜித் - விஜய் லிஸ்டுலையே இல்ல... கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி விருந்தாக வந்த படங்கள் என்னென்ன?
Vaali About Song
என்கிற பாடல் தான். அவர் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில், இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால், அரிசி பஞ்சம் ஏற்பட்டு உணவு தட்டுப்பாடு நிலவியது. அதை நினைவில் கொண்டு தான் இந்த பாடலை எழுதினர். இது தான் எதார்த்தத்தை கூறிய பாடல் என என்.எஸ்.கிருஷ்ணன் புகழ்ந்து கூறினார். இராமையாதாஸ் அற்புதமான பல பாடல்களை எல்லாம் எழுதியுள்ளார். குறிப்பாக பத்தினி தெய்வம், மிசியம்மா, படங்களில் அவர் எழுதிய பாடல்கள் அற்புதமாக இருக்கும். நம்முடைய முன்னோடிகள், நம்மை விட நூறு சதவீதம் நம்மளை விட அறிவாளிகள் என வாலி இந்த பேட்டியில் பேசி உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.