
உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் YouTuber இர்ஃபான். தன்னுடைய திறமையை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டு, இன்று திரைபிரபலங்களை பேட்டி கண்டு அதனை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதே போல் வெளிநாடுகளுக்கு சென்று விதவிதமான ஸ்ட்ரீட் ஃபுட்டை ரிவியூ செய்து வரும் இர்ஃபான், விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, முதல் ரன்னர் ரப்பாக மாறினார்.
அவ்வப்போது சில சர்ச்சைகளில் வாண்டடாக சிக்கி கொள்ளும் இர்ஃபான், ஏற்கனவே தன்னுடைய குழந்தை பிறப்பதற்கு பின்பே அதன் பாலினத்தை ரிவீல் செய்து, சர்ச்சையில் சிக்கினார். வெளிநாட்டிற்கு சென்ற போது இவர் பாலினம் குறித்து அறிந்து கொண்டாலும், இந்தியாவில் இப்படி அறிவிப்பது தடை செய்யப்பட்டது என்பதால், இவரிடம் மெடிக்கல் கவுன்சில் விளக்கம் கேட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆனால் தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் இர்ஃபான் சிக்கியுள்ளார்.
தன்னுடைய மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது, மகளின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபில் இர்ஃபான், கண்டென்ட்டுக்கு ஆசை பட்டு வெளியிட்டுள்ள வீடியோ தான் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. மருத்துவர்கள் இந்த வீடியோவை பார்த்து, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். அதே போல் இது குறித்து மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்த நிலையில், இதுவரை இர்ஃபான் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் கொடுக்கப்பட வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்ட உள்ள 'வேட்டையன்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?
மேலும் இந்த சம்பவம் குறித்து, எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவ ஊரக நலப்பணி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது "சம்பந்தப்பட்ட மருத்துவமனை சோழிங்கநல்லூரில் உள்ளது. அவர்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்கும்மாறு கேட்போம். இது தவறு எனும் பட்சத்தில்,கிளினிக்கல் எக்ஸ்பிரிமெண்ட் ஆக்ட் என்கிற சட்டத்தின் படி, மருத்துவமனையின் அப்ரூவலை கேன்சல் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு அடுத்தபடியாக இதில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர் பற்றி, மெடிக்கல் கவுன்சிலுக்கு நாங்கள் ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தான் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இர்பான் என்பவர் ஒரு தனிப்பட்ட நபர், ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஏற்கனவே ஒரு சர்ச்சையான வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார். தமிழகத்தில் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகும். வெளிநாட்டில் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டு வந்து இங்கு சொன்னதும் குற்றம்தான். இந்த சம்பவம் பிரச்சனை ஆன பின்னர் மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த சம்பவம் குறித்தும் முறையாக விளக்கம் கேட்க தயாராகி உள்ளோம். இதில் மூன்று பேர் சம்மந்தப்பட்டுள்ளனர். ஒன்று மருத்துவர் அடுத்தபடியாக, நர்சிங் ஹோம் சிஏ கேன்சல் பண்ண வாய்ப்பு இருக்கு, இர்பானிடம் விளக்கம் கேட்ட பின்னர் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
அஜித் - விஜய் லிஸ்டுலையே இல்ல... கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி விருந்தாக வந்த படங்கள் என்னென்ன?
முன்பு இர்ஃபான் பாலினத்தை அறிவித்ததாக தெரிவித்த போது டிஎம்எஸ் ஆக நான் இல்லை. தற்போது அந்த பழைய பிரச்சனை குறித்து மீண்டும் விசாரித்து வருகிறேன். ஏற்கனவே அவர் செய்த குற்றத்தின் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி இது போல் யாரும் செய்ய மாட்டார்கள். நிச்சயமாக இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் வெளியிட்ட இந்த வீடியோவை சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இவை அனைத்தும் விளம்பரத்திற்காக தான் அவர் செய்கிறார். அவரின் சேனலை சேனலை பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என, முழுக்க முழுக்க ஒரு விளம்பர நோக்கத்திற்கு செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.
அதை போல் இது ஒரு தவறான முன்னுதாரணம். இதே போல் கேமராவை கொண்டு போய் ஆபரேஷன் தியேட்டரில் வைத்துக்கொண்டு எடுப்பது அதை விளம்பரத்துக்காக யூடியூபில் போடுவது போன்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளக் முடியாதது. ஆபரேஷன் தியேட்டருக்கு இன்று தனி மரியாதை உள்ளது. இதுபோன்ற செயல்களால் நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அத்துமீறல் காரணமாக இர்ஃபான் கைது செய்யப்படுவாரா? எங்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.
ரஜினி முதல் தனுஷ் வரை; அசிங்கப்படுத்தியவர் முன்பு வளர்ந்து தரமான ரிவெஞ் கொடுத்த 3 பிரபலங்கள்!