அந்த வகையில் இளையராஜா, திரை உலகில் அறிமுகமாகி உச்ச இசையமைப்பாளராக பயணித்து வந்த காலத்தில், பிரபல இயக்குனர் ஒருவருடைய திரைப்படத்தில் இசையமைக்க அவர் ஒப்பந்தமாகிறார். பொதுவாக இசையமைப்பதற்கு முன் அப்படத்தின் கதையை கேட்கும் வழக்கம் இளையராஜாவிடம் உண்டு. அப்படி அந்த பிரபல இயக்குனர் கூறிய கதையை கேட்டதும், இளையராஜாவிற்கு சுத்தமாக கதை பிடிக்கவில்லையாம். அரை மனதோடு தான் அந்த திரைப்படத்தில் இசையமைக்கவே ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் தன்னுடைய தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்த முழு திரைப்படத்திற்கும் திறன்பட இசையமைத்து முடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் சிறியதும் பெரியதுமாய் மொத்தம் ஒன்பது பாடல்கள். ஆனால் இந்த ஒன்பது பாடல்களையும் ஒரே பாடகர், இரண்டே இரண்டு பாடகிகளை வைத்து ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடித்திருப்பார் இளையராஜா.