டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!

First Published | Jun 23, 2023, 4:16 PM IST

நடிகர் ராம் சரணுக்கு ஜூன் 20 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், இன்று அவரின் மனைவி உபாசனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன்,  ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு, திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆன  பின்னர்,  உபாசனா கர்ப்பமாக இருந்த நிலையில் இந்த  தம்பதியருக்கு செவ்வாய் கிழமை ஜூன் 20-ஆம் தேதி அன்று, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உபாசனா ராம்சரணுக்கு செவ்வாய் கிழமை அதிகாலை 1:49க்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

வயசுக்கு மரியாதை வேண்டாமா? பரியேறும் பெருமாள் படத்தில்.. வசனம் மறந்ததால் நெல்லை தங்கராஜை அறைந்த மாரி செல்வராஜ்

Tap to resize

அதே போல் குழந்தையையும், உபாசனாவையும் பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்ட சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து வருகை தந்தனர்.

குழந்தை பிறந்த பின்னர், சிரஞ்சீவி தாதாவான சந்தோஷத்தையும் செய்தியாளர்கள் முன்பு வெளிப்படுத்தினார்.  அப்போது பேசிய அவர் ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.

தங்கை ஷாமிலியுடன் செலபிரேஷன் மோடில் அஜித்தின் ஆசை மனைவி ஷாலினி! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

 பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.  ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக. வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

குழந்தை பிறப்பதற்கு முன்பு, நல்ல அறிகுறிகள் தென்பட்டதாகவும்... குழந்தையின் ராசி தான் ராம் சரண் அவரது தொழிலில் நல்ல வளர்ச்சியடைய காரணம் என்று கூறிய சிரஞ்சீவி, தங்களின் குடும்பமே ஆஞ்சிநேயர் பக்தர்கள். ஆஞ்சிநேயருக்கு உகர்ந்த நாளான செவ்வாய் கிழமையிலியேயே குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்தார்.

'லியோ' படப்பிடிப்பின் போது.. காஷ்மீரில் தளபதியுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு பர்த்டே வாழ்த்து கூறிய த்ரிஷா!

அதே போல் தாயும் - சேயும் நலமுடன் உள்ளதாக ராம் சரணும் செய்தியாளர்களிடம் கூறினார். குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இன்று உபாசனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை கையில் ஏந்தியபடி, ராம் சரண் தன்னுடைய மனைவியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில்... வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது. 

82 கிலோ முதல்... 352 கிலோ வரை..! 45 வயதிலும் ஒர்கவுட்டில் அசால்ட் செய்யும் ஜோதிகா! வெறித்தனமான வீடியோ!

விரைவில் ராம் சரண் - உபாசனா தம்பதி தங்களின் குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படங்களையும் வெளியிடுவார்கள் என ராம் சரணின் ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!