hansika
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அவர் ஹன்சிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
hansika
இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது யோகா செய்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஹன்சிகா, தான் உடல் எடையை குறைத்ததற்கு யோகாவும் உதவியதாக கூறி இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்துவிட்டு யோகா மூலம் இப்படி ஆனதாக கூறுகிறீர்களே என கமெண்ட் செய்திருந்தார்.