சிவாஜி தனது பிறந்தநாளன்று காமராஜரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம், ஆனால் 1975-ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி சிவாஜியின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்த காமராஜரே அன்னை இல்லத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். சிவாஜியை வாழ்த்திவிட்டு சென்ற மறுதினமே காமராஜர் காலமானார். இப்போதும் சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, நடிகர் திலகத்தின் பேரன் விக்ரம் பிரபு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். காமராஜர், விபி சிங், எம்ஜிஆர் வரை வந்து உணவு சாப்பிட்டு சென்ற பெருமை கொண்டது அன்னை இல்லம்.
அதுமட்டுமின்றி யானை தந்தங்கள், சிவாஜி வேட்டையாடிய புலியின் தோல் என பல ஆச்சர்யங்கள் நிறைந்த வீடாக இந்த அன்னை இல்லம் இருந்து வருகிறது. இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்னை இல்லத்தை தான் தற்போது ஜப்தி செய்ய உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். சிவாஜி சென்னை மற்றும் தஞ்சாவூரில் வாங்கிக் குவித்து வைத்திருந்த சொத்துக்கள் பல ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக தஞ்சாவூரில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி கமலா தியேட்டர் மற்றும் பல சொத்துக்கள் விற்கப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் இந்த ஜப்தி அறிவிப்பால் சிவாஜியின் அன்னை இல்லமும் பறிபோய்விடுமோ என்கிற அச்சம் சிவாஜி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதை அரசே கைப்பற்றி நினைவில்லம் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிரபுவின் பெயரில் வீடு இருக்கிறது – ஜப்தி உத்தரவை ரத்து செய்ய ராம்குமார் கோரிக்கை!