NS Ponkumar Marriage: இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் - விவேகா திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது!

Published : Mar 05, 2025, 07:45 PM IST

Director NS PonKumar Marriage: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார், விவேகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.  

PREV
15
NS Ponkumar Marriage: இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் - விவேகா திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது!

தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் திருமண அறிவிப்பை ஒருபுறம் வெளியிட்டு வர, சில பிரபலங்கள் திருமணத்திற்கு பின்னரே தம்பதிகளாக திருமணமானதை கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

25
'1947 ஆகஸ்ட் 16' திரைப்பட இயக்குனர்

அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனர் என்.எஸ்.பொன்குமார், (NS Ponkumar) விவேகா என்பவரை திருமணம் செய்து கொண்ட தகவலை வெளியிட்டுள்ளார். என்.எஸ்.பொன்குமார், கடந்த 2023-ஆம் ஆண்டு கெளதம் கார்த்தி ஹீரோவாக நடித்து, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற '1947 ஆகஸ்ட் 16' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். 

35
ஏ.ஆர்.முருகதாஸ் துணை இயக்குனர்

இதற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadass) இயக்கத்தில் வெளியான தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான கத்தி, மகேஷ் பாபு (Mahesh Babu) நடிப்பில் வெளியான ஸ்பைடர் மற்றும் சோனாக்ஷி சின்ஹா (Sonakshi Sinha) நடிப்பில் வெளியான அகிரா ஆகிய படங்களில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர்.

45
என்.எஸ்.பொன்குமார் - விவேகா திருமணம்

தற்போது இயக்குனர் என்.எஸ்.பொன்குமாருக்கு திருமணம் ஆன தகவல் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவர் மார்ச் 2, 2025 அன்று தென்காசி மாவட்டம் கீழகலங்கலில் உள்ள மாரியம்மன் கோவிலில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் விவேகா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

55
எளிமையான முறையில் நடந்த திருமணம்:

மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவிலில் நடந்ததால் இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ள இவருக்கு ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories