கணவருடன் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்!

Published : Mar 05, 2025, 05:44 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னோடைய 40-ஆவது பிறந்தநாளை, கணவருடன் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி உள்ளார். இது குறித்த போட்டோஸ் வைரலாகி வருது.  

PREV
15
கணவருடன் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்!
Varalakshmi sarathkumar

ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று கொண்டாடப்படும் பிரபலம் தான் நடிகர் சரத்குமார். 70 வயதிலும் யங் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 90-ஸ் காலகட்டத்தில் ஏராளமான தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்த சரத்குமாருக்கு, சமீப காலமாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வலுவான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

25
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி திரைப்படம்

அப்பா சரத்குமாரை தொடர்ந்து, திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்புவை ஹீரோவாக வைத்து இயக்கிய 'போடா போடி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தாலும், வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை தழுவியதால், வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் ராஜாவாக மாறிய மதகஜராஜா! 8 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

35
குணச்சித்திர வேடத்திலும் வில்லியாகவும் மிரட்டி வரும் வரலட்சுமி

தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் ஹீரோயினாக தற்போது வரை திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரள வைத்தார்.கிட்ட தட்ட லேடி விஜய் சேதுபதி போல் வெரைட்டியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில், கடைசியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

45
நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

கடந்த ஆண்டு தன்னுடைய காதலர், மற்றும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சிங்கிளாக பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி இந்த ஆண்டு கணவருடன் சேர்ந்து தனது 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

மச்சானோடு செம சேட்டை; தடபுடல் விருந்தோடு தலை தீபாவளியை கொண்டாடிய வரலக்ஷ்மி நிக்கோலாய் ஜோடி!

55
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்

இதன் ஒரு பகுதியாக, வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அம்மா மற்றும் கணவருடன் ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும், ஆசிரமத்திற்கு வருகை தந்த நிலையில் அவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வரலட்சுமி சரத்குமாருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories