அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் இவர்தான்; நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் இந்த நடிகை யார்?

Published : Mar 05, 2025, 04:06 PM ISTUpdated : Mar 05, 2025, 04:23 PM IST

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் என்றால் நயன்தாரா தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் தற்போது அவரை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி ஷாக் கொடுத்துள்ளார் பிரபல நடிகை. அவர் யார் என்பதை பார்க்கலாம் 

PREV
15
அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் இவர்தான்; நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் இந்த நடிகை யார்?

Highest Paid South Indian Actress : சம்பள விஷயத்தில் நடிகை நயன்தாரா பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளார். முன்பெல்லாம் ஹீரோயின்களுக்கு அதிக சம்பளம் கிடையாது. ஹீரோக்கள் கோடிகளில் வாங்கினாலும்.. ஹீரோயின்களுக்கு லட்சங்களில் தான் கொடுத்தார்கள். பாலிவுட்டில் மட்டுமே ஹீரோயின்களுக்கு கொஞ்சம் அதிகமாக சம்பளம் கிடைத்தது.

ஆனால் பான் இந்தியா படங்கள் புண்ணியத்தால் தென்னிந்தியாவிலும் ஹீரோயின்களுக்கு நல்ல நேரம் வந்தது. அவர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் நயன்தாரா முன்னணியில் உள்ளார்.

25
Nayanthara

வயது ஏறினாலும் நயன்தாராவுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. உண்மையில் ஹீரோயின்களுக்கு 30 வயதை தாண்டினால் டிமாண்ட் குறையும். ஆனால் நயன்தாராவுக்கு 40 வயதானாலும்.. அவர் தனது கவர்ச்சி மற்றும் ஃபிட்னஸை மெயிண்டெயின் செய்து.. தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நயன்.. 1000 கோடி வசூல் செய்து, அங்கேயும் அவருக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி வரை கேட்கிறார் நயன்தாரா. ஆனால் சமீபத்தில் நயன்தாராவுக்கு ஷாக் கொடுத்தார் இன்னொரு ஹீரோயின். அவர் யார்..? 

35
Sai pallavi

அவர் வேறு யாருமல்ல.. சாய் பல்லவி. தெற்கில் யாராலும் அசைக்க முடியாத நயன்தாராவின் சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு.. தனது பவர் ஸ்டார் இமேஜால் செக் வைத்துள்ளார். சமீபத்தில் அமரன் படத்தின் மூலம் 300 கோடி கிளப்பில் நுழைந்த சாய் பல்லவி.. தண்டேல் படத்தின் மூலம் 100 கோடி வசூலித்து கலக்கி வருகிறார்.

அதனால் சாய் பல்லவியின் டிமாண்ட் அதிகமாகிவிட்டது. அதிக சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். தண்டேலுக்காக அவர் 10 கோடி சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. அமரன், தண்டேல் ஹிட் ஆனதால் சாய் பல்லவியின் சம்பளமும் அதிகரித்துவிட்டதாம்.

இதையும் படியுங்கள்... Sai Pallavi Makeup Secret: சாய் பல்லவி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டே மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?

45
Sai pallavi salary

தற்போது சாய் பல்லவி இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணத்தில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் ராமனாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்க, சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சூப்பர் ஃபாஸ்ட்டாக நடந்து வருகிறது. ஆனால் ராமாயணம் படத்துக்கு சாய் பல்லவி 30 கோடி சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் இந்த கணக்கு ஒரு படத்துக்கு மட்டும் இல்லை. ராமாயணம் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 30 கோடி கொடுக்கிறார்களாம். 

55
Highest Paid Actress Sai Pallavi

சாய் பல்லவி ஒரு படத்துக்கு 15 கோடி வாங்குகிறாராம். இந்த கணக்கில் நயன்தாராவை அவர் மிஞ்சிவிட்டார். அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என்று பெயர் எடுத்த சாய் பல்லவிக்கு இந்த ரேஞ்ச் சம்பளம் கொடுப்பதில் தவறில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சாய் பல்லவியும் தொடர்ச்சியாக படங்களில் பிஸியாக இருக்கிறார். சீதையாக ராமாயணத்தில் எப்படி நடிக்கிறார் என்று பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல தமிழில் சிம்பு - ராம்குமார் கூட்டணியில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர்.49 படத்திலும் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Sai Pallavi: திருமணத்திற்காக பாட்டி கொடுத்த சேலையை; சாய் பல்லவி ஏற்ற சபதம் நிறைவேறுமா?

Read more Photos on
click me!

Recommended Stories