Published : Mar 05, 2025, 03:56 PM ISTUpdated : Mar 05, 2025, 09:34 PM IST
வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்த நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா தனது அப்பா மற்றும் குடும்பத்தினர் பற்றி உருக்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நட்சத்திர குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு, விஜயகுமார் குடும்பத்தில் உள்ள பலரும் நடிகர் - நடிகைகளாக உள்ளனர். விஜயகுமாரின் துவங்கி, அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மூத்த மகள் கவிதா, வனிதா விஜயகுமார், ப்ரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் விஜயகுமாரின் பேரனும் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார்.
27
அனிதா மருத்துவர் ஆவதில் உறுதியாக இருந்த மஞ்சுளா விஜயகுமார்
விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் மட்டும், நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதனை ஏற்று கொள்ளாமல், ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இவரின் ஆசைக்கு துணை நின்றது மஞ்சுளா தான். ஒருமுறை அனிதாவை ஹீரோயினாக நடிக்க வைக்க, முன்னணி இயக்குனர் ஒருவர் அணுகிய போது... அவளை நடிக்க வைக்க விருப்பம் இல்லை அவள் மருத்துவர் ஆகும் கனவோடு இருக்கிறாள் என சொல்லி படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினார்.
காதலரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆன அனிதா விஜயகுமார்
வெற்றிகரமாக தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்த அனிதா விஜயகுமார், தன்னுடன் பணியாற்றிய மருத்துவர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டு லண்டலில் செட்டி ஆனார். இவருடைய பிள்ளைகளும் தற்போது லண்டனில் அப்பா - அம்மாவை போல மருத்துவத்துறையை தேர்வு செய்து, மருத்துவர்களாக உள்ளனர்.
47
50 வயதில் விருப்ப ஓய்வு பெற்ற அனிதா விஜயகுமார்
அனிதாவுக்கு, சிறு வயதில் இருந்தே எமர்ஜன்சியில் பணியாற்ற வேண்டும் என்பது தான் கனவாக இருந்த நிலையில், 15 வருடங்கள் எமர்ஜன்சியில் பணியாற்றிய பின்னரே மருத்துவ துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். கை நிறைய சம்பளம் பெற்ற போதிலும் இந்த வேலையை உதறிவிட்டு ஏன் சென்னை வந்து செட்டில் ஆனேன் என்றும், இதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் அனிதா விஜயகுமார் தற்போது கூறியுள்ளார்.
சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது
இந்த வீடியோவில், சிறு வயதில் இருந்தே எனக்கு டாக்டர் ஆகவேண்டும் என ஆசை. "எனது விருப்பத்தை புரிந்த கொண்ட அப்பாவும், அம்மாவும் என்னை டாக்டருக்கே படிக்க வைத்தார்கள். என்னை நடிக்க சொல்லவில்லை. வீட்டில் யார் என்ன ஆசைப்படுகிறமோ அதைத்தான் வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார்கள். நான் மக்களுக்காக பணியாற்ற வேண்டும், அவர்கள் கஷ்டப்படும் போது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
67
எமர்ஜன்சியில் வேலை பார்த்த அனுபவம்
எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவர்களே செய்து தந்தார்கள். அதனால் தான் என்னால் படிக்க முடிந்தது. அதுபோல எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. மக்களோடு பழக வேண்டும் மக்கள் கஷ்டப்படும் போதும் பதட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டேன். நான் படித்து முடித்து முதலில் 20 வருடங்கள் புரபோஷர் வேலை பார்த்தேன். அதன் பிறகு 15 வருடங்கள் எமர்ஜென்சில் வேலை பார்த்தேன். பலரும் உயர் போகும் தருவாயில், சேர்த்து வைத்த சொத்தை, நகையை பார்க்க வேண்டும் என ஆசை பட்டது இல்லை. குடும்பத்தை பார்க்க வேண்டும், அப்பா, அம்மா, மகன், குழந்தைகள், மனைவியை பார்க்க வேண்டும் என்று என் கையை பிடித்துக் கொண்டு கேட்பார்கள்.
எப்போதுமே பணத்தை விட, உறவுகள் தான் முக்கியம். இப்போது என் வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை சேர்த்து வைத்துக் கொண்டு குடும்பத்தோடு நேரம் செலவிட என்னுடைய வேலையில் விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியும். கூடுமானவரையில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் அனிதா விஜயகுமார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.