சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்ததோடு நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி புத்தம் புதிய சாதனையும் படைத்தது. பிரபல நடிகர்களின் படங்கள் 100 நாட்கள் தொட்டது நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய ரோலில் நடித்த இதில் கிளைமாக்ஸ் சீனில் ரோலக்ஸ் ரோலில் சூர்யா தோன்றிரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார்.