விஜயின் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வடிவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்று இருந்தது. அதில் முகம் முழுவதும் பேண்டேஜ் உடன் கையில் மேப் எடுத்துக்கொண்டு நாயகன் யாரையோ தேடி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த டீசர் படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.