Jonita Gandhi
தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்று இருந்த அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் சிங்களாக அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டது.
விஜயின் அற்புதமான நடனத்தில் வெளியான இந்த பாடல் சிவகார்த்திகேயனின் எழுத்துக்களில் அனிருத் குரலில் இசையில் வெளியானது. இந்த பாடலுக்கான பெண் குரலை கொடுத்து இருந்தவர் தான் ஜோனிதா காந்தி.
மேலும் செய்திகளுக்கு...இந்த லிங்கை க்ளிக் பண்ணாதீங்க..அசிங்க படுத்திடுவாங்க...கதறி அழும் சீரியல் நடிகை
Jonita Gandhi
பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, கனடா மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தமிழிலும் மிக முக்கிய பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தான் இவர் முதன்முறையாக பாடியிருந்தார். தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், தமன், பிரீதம், சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா, அனிரூத், சலீம் சுலைமான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் பலவும் ஹிட் அடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு நாளில்..மனதை கவர்ந்த பாடல்களில் சில
Jonita Gandhi
சமீபத்தில் டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலையும் இவர் தான் பாடியிருந்தார். அதோடு ஏ ஆர் ரகுமான் தயாரிப்பில் வெளியான 99 சாங்ஸ் படத்திலும் சீமந்த பூ பாடலையும் இவர் பாடினார்.
Jonita Gandhi
இவர் சமீபத்தில் பாடி இருந்த அரபு குத்து பாடல் உலகம் முழுவதும் பேமஸ். இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்ட அரபிக் குத்து பாடலுக்கு விளையாட்டு வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பட்டிதொட்டி ரசிகர்கள் அனைவருமே இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்தனர்.
Jonita Gandhi
இந்த பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிக அறிந்த பாடகியாக மாறிவிட்ட ஜோனிதா காந்தி அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ஒரு புத்தகத்தின் அட்டைப் பக்கத்திற்காக அவர் தற்போது பைக்கில் அமர்ந்தபடி எடுத்துள்ள கவர்ச்சி போட்டோ சூட் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.