குறுகிய காலத்திலேயே தன்னுடைய கியூட் அழகால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த, நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி, சுமார் 400 கோடி வசூலை ஈட்டி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா நடிக்கும் பகுதி குரைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது, முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக இயக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது ரசிகர்களை வசீகரிக்கும் வண்ணமாக வெரைட்டியாக கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் ராஷ்மிகா தற்போது, பேன்ட்டை வெட்டி தைத்தது போல் ஸ்ட்ராப் லேஸ் மேலாடை அணிந்து, வேற லெவல் ஃபேஷனில் போஸ் கொடுத்து பாலிவுட் இளம் நடிகைகளை மிரள வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.