maamannan
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். இதில் உதயநிதி உடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
maamannan
மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது அதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னே மேடையேறி அவர் எடுத்த தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
maamannan
அதில் மாமன்னன் படம் உருவாவதற்கு காரணமே தேவர்மகன் தான் என கூறிய அவர், அதில் வரும் எசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என பேசி இருந்தார். மாரி செல்வராஜின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாதியே வேண்டாம் என கருத்து சொன்ன படத்தை சாதிய பெருமை பேசிய படமாக மாரி செல்வராஜ் சொன்னதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடினர். படத்தின் புரமோஷனுக்காக அவர் இப்படி பழையவற்றை தேவையில்லாமல் கிளறி வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் பிறந்தநாள்... திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்
maamannan
இந்நிலையில், மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றிய பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனாக இருப்பார் என்றும், அவருடைய அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கண்ணாபின்னானு கத்துவாரு, ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும் என கூற, அதற்கு வடிவேலுவும் ஆமாம் என சொன்னார்.