அரசுக்கு போட்டியாக தனியார் இலவச பஸ் சேவை... தமிழகம், கேரளாவில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்

Published : Jun 22, 2023, 11:56 AM IST

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம், மட்டுமின்றி கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இலவச பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

PREV
14
அரசுக்கு போட்டியாக தனியார் இலவச பஸ் சேவை... தமிழகம், கேரளாவில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்

தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் என்றால் அது விஜய் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு வயது வித்தியாசம் இன்றி எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மாஸ் நடிகருக்கு பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா, தடபுடலாக கொண்டாடி அதகளப்படுத்தி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

24

அந்த வகையில் கடலூரில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக மயூரா என்கிற மினி பேருந்தை வாடகைக்கு எடுத்து, இன்று ஒரு நாள் அந்த பேருந்தில் அனைவரும் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... விஜய் மக்கள் இயக்கத்தினரின் வாகன பேரணிக்கு அனுமதி தர மறுத்த போலீசார் - காரணம் என்ன?

34

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை போல் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் கேரளா விஜய்யின் கோட்டை என்றும் கூட சொல்லுவார்கள். அங்கும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. தமிழ்நாட்டை போல் கேரளாவிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்காக இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளனர்.

44

கேரளாவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற இலவச பேருந்து சேவையை இன்று ஒரு நாள் மட்டும் விஜய் ரசிகர்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி கேரளாவின் கோயிலண்டே, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த இலவச பேருந்து சேவை இயங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இலவச பேருந்து சேவையை விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் இந்த சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... VIDEO : ''ஜோசப் விஜய் எனும் தான்'' அரசியலுக்கு வா தளபதி! - போஸ்டருடன் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Read more Photos on
click me!

Recommended Stories