vijay
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக இருந்ததால், அவருக்கு சினிமாவில் நுழைவது எளிதாகவே இருந்தது. விஜய் தனது 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த 1984-ம் ஆண்டு எஸ்.ஏ.சி இயக்கிய வெற்றி படம் தான் விஜய் நடித்த முதல் படமாகும். இதையடுத்து ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் உள்பட 7 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் கடந்த 1992-ம் ஆண்டு, தனது 18 வயதில் நாயகனாக அறிமுகமானார்.
vijay
எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய்யை தன்னுடைய நாளைய தீர்ப்பு படம் மூலம் நாயகனாக்கினார். இதையடுத்து தொடர்ந்து விஜய்யை வைத்து விஷ்ணு, ரசிகன் போன்ற படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி. இதில் ரசிகன் படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் படமாகும். இதையடுத்து விக்ரமன் இயக்கத்தில் அவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம் தான் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமும் இதுதான்.
vijay
பின்னர் தன்னுடைய சொந்த முயற்சியால், அடுத்தடுத்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தளபதியாக நெஞ்சுக்குள் குடியிருக்கும் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜய் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு, சம்பள விவரம் மற்றும் அவரிடம் உள்ள கார் கலெக்ஷன்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
vijay
நடிகர் விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார். இதுவரை ஒரு படத்துக்கு ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி வந்த விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படத்துக்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பின்னர் விஜய் அரசியலில் இறங்க உள்ளதால் இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் உலாவருகின்றன.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் நாயகனுக்கு பாலிடிக்ஸ் ஆசை எப்படி வந்தது? விஜய்யின் விஸ்வரூப அரசியல் - ஒரு பார்வை
vijay
நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.445 கோடி இருக்குமாம். நடிகர் விஜய்க்கு சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் வீடுகள் உள்ளன. அதில் நீலாங்கரையில் கடற்கரையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு அவர் கட்டிய வீடு, ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் வீட்டை மாடலாக வைத்து கட்டியதாம். ஒருமுறை அமெரிக்கா சென்றபோது டாம் குரூஸ் வீட்டை பார்த்து விய்ந்துபோன விஜய், அந்த வீட்டை போட்டோ எடுத்து வந்து, அதேபோன்று கடற்கரையோரம் கட்டிய வீடு தான் அவரின் நீலாங்கரை வீடு.
vijay
நடிகர் விஜய் எளிமையை விரும்பக்கூடியவராக இருந்தாலும், அவருக்கு எக்கச்சக்கமான சொகுசு கார்கள் உள்ளன. அவரிடம் பி.எம்.டபிள்யூ X5 மற்றும் X6, ஆடி A8 L, ரேஞ்ச் ரோவர் எவோக், ஃபோர்டு மஸ்டாங், வால்வோ XC90, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், இன்னோவா என இவரிடம் உள்ள கார்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும்.