‘மிஸ்டர் எக்ஸ்’ பூஜையில் கலந்து கொள்ளாத மஞ்சு வாரியர்.! ஆர்யா - கவுதம் கார்த்திக் கலந்து கொண்ட புகைப்படங்கள்!

Published : Jun 22, 2023, 12:33 AM IST

ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தின் பூஜை அமோகமாக நடந்து முடிந்துள்ளது.  

PREV
14
‘மிஸ்டர் எக்ஸ்’ பூஜையில் கலந்து கொள்ளாத மஞ்சு வாரியர்.! ஆர்யா - கவுதம் கார்த்திக் கலந்து கொண்ட புகைப்படங்கள்!

ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr. X) திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.

24

இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சவாலான வேடத்தை  ஏற்றிருக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. பொழுதுபோக்கு கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை ‘எப்ஐஆர்’ புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லஷ்மன்குமார் இந்தப்படத்தை உயர்ந்த தொழிநுட்ப தரத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார். 

நள்ளிரவில் திடுதிப்புனு காவல் நிலையத்திற்கு ஓடிய பிக்பாஸ் ரக்ஷிதா! கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார்..!

34

மிஸ்டர் எக்ஸ் (Mr. X) படத்திற்காக இந்தியா, அசர்பைஜான் மற்றும் ஜாரிஜியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும் அதிரடி சண்டை காட்சிகளை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா வடிவமைக்கிறார்.  திபு நிபுணன் தாமஸ் இசையமைப்பில் உருவாகும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை தன்வீர் மிர் கவனிக்க, படத்தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார்.

44

தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும் கலையை இந்துலால் கவீத்தும் ஆடை வடிவமைப்பை AP.உத்தரா மேனனும் கவனிக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகியாக பால்பாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக ஷ்ராவந்தி சாய்நாந்த்தும் பொறுப்பேற்றுள்ளனர். இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார் A.வெங்கடேஷ். மிஸ்டர் எக்ஸ் (Mr. X) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

போட்ரா வெடிய.. தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்தம் தெறிக்க வெளியான 'லியோ' ஃபர்ஸ்ட் லுக்..!

Read more Photos on
click me!

Recommended Stories