ஆணுடன் நெருக்கம்; மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்? யார்ரா இது என வலைவீசி தேடும் நெட்டிசன்ஸ்

First Published | Jun 22, 2023, 1:55 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

keerthy suresh

மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

keerthy suresh

மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாக சைரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதுதவிர ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளன. இதுபோக தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் பிறந்தநாள்... திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்


Keerthy Suresh

இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தொடர்பாக அடிக்கடி காதல் வதந்திகளும் பரவிய வண்ணம் உள்ளன. அந்த வகையில், அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய கீர்த்தி பின்னர் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்த பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

keerthy suresh

இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான சமயத்தில், துபாயில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டதால், இவர் தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்று வதந்தி பரவியதை அடுத்து அவரது தந்தை அதனை திட்டவட்டமாக மறுத்தார்.

keerthy suresh

இந்நிலையில், தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் கீர்த்தி சுரேஷ். அதன்படி ஆண் நண்பர் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகின்றன. ஒருவேளை இவர் தான் கீர்த்தியின் காதலராக இருப்பாரோ என சந்தேகப்பட்ட நெட்டிசன்கள், யார்ரா இது என வலைவீசி தேடிய நிலையில், அவரும் கீர்த்தி சுரேஷின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... 2 ஆயிரம் டான்சர்களுடன் விஜய் ஆடிய மாஸ் குத்து சாங்... நா ரெடி பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது லியோ படக்குழு

Latest Videos

click me!