இதையடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தை செல்ல அய்யாவு என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.