எச்.வினோத் - கமல்ஹாசன் படத்தில் இணையும்... யாரும் எதிர்பார்க்காத இரு பிரபலங்கள்! அப்போ வேற லெவல் தான்!

First Published | Jun 30, 2023, 11:20 PM IST

கமல்ஹாசனை வைத்து இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள படத்தில், இணையும் இரண்டு முக்கிய பிரபலங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை, கமல் ஹாசன் தயாரித்திருந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த படம் , இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்ததோடு கமல்ஹாசனுக்கு பல கோடி லாபத்தையும் பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றி கொடுத்த உச்சாகம், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது  உலகநாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ’இந்தியன் 2’ திரைப்படம் இன்னும் ஓரிரு வாரங்களில், முடிவடைய உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு, ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசளித்த முகேஷ் அம்பானி..! விலை மட்டும் இவ்வளவா?
 

Tap to resize

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்திலும், பிரபாஸுக்கு வில்லனாக ப்ரொஜெக்ட் கே படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன், படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு.. வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, இப்படத்தில் கமல்ஹாசனுக்கு நண்பராக நடிக்க உள்ளதாகவும், காமெடி ரோலில் யோகி பாபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...  மீண்டும் விஜய் சேதுபதி - கமல் காம்போ இணைந்தால், அப்படம் வேற லெவெலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

10 ஆண்டுகள் கழித்து பெற்றெடுத்த தேவதைக்கு வித்தியாசமான பெயர் சூட்டிய ராம் சரண் - உபாசனா ஜோடி!

Latest Videos

click me!