பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான், கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இதையும் படியுங்கள்... அதென்ன ‘கங்குவா’..? சூர்யா 42 படத்தின் வித்தியாசமான தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா..!
இந்நிலையில், இன்று முதல் பொன்னியின் செல்வன் படக்குழு வெளியூர் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது. அதன்படி இன்று கோயம்புத்தூரில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி ஆகியோரும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜாலியாக விமானத்தில் சென்றுள்ளனர்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சென்றதும், அங்குள்ள விமானத்தின் படியில் அனைவரும் நின்று போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், “கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா” என பதிவிட்டுள்ளார்.