இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவரது பாடல் பிடிக்காத ஆளே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டுள்ளார் இளையராஜா. அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், 40 ஆண்டுகளைக் கடந்து இன்று விடுதலை வரை நீடித்து வருகிறது. இசை மீதான தீராத காதலால், தற்போது 80 வயதை எட்ட உள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார் இளையராஜா.
இளையராஜாவைப் போல் அவரது வாரிசுகளும் இசையமைப்பாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். அதேபோல் அவரின் இளைய மகள் பவதாரணியும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் மற்றொரு மகனான யுவன் சங்கர் ராஜா தனது பாடல்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 2011-ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், இளையராஜா ஜீவாவை திருமணம் செய்துகொள்ளும் முன் வீணா காயத்ரி என்பவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். அந்த லவ் ஸ்டோரியை பற்றி தற்போது பார்க்கலாம். இளையராஜா கடந்த 1970-ம் ஆண்டு வீணா காயத்ரி என்கிற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கிய காயத்ரியை பாராட்டி அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இசைத் துறையில் முக்கிய பொறுப்பையும் வழங்கினாராம்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா?
ஒரு தலையாக காதலித்து வந்த இளையராஜா, ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடம் சென்று தன் காதலை வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்த வீணா காயத்ரி நோ சொல்லிவிட்டாராம். இருந்தும் மனம்தளராத இளையராஜா அந்தப் பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். ஆனால் மனம்மாறாத வீணா காயத்ரி, தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம்.