மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரையும் அடையாளத்தையும் கொடுத்தது தென்னிந்திய சினிமா தான்.
கடந்தாண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மிருணாள் தாக்கூர்.
இப்படத்தில் அவர் நடித்திருந்த சீதா மகாலட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததோடு மட்டுமின்றி அவரின் அடையாளமாகவும் மாறியது.
அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி ராணியாக மிரட்டி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது அட்டைப் படம் ஒன்றிற்காக மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
வித்தியாசமான மாடர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடிகை மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள அந்த போட்டோஷூட் தான் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை டிரெண்டிங் ஆக உள்ளது.