மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா, மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளி வெற்றிவாகை சூடியது. இதையடுத்து அவர் நடித்த திரைப்படம் தான் சாகுந்தலம். இப்படத்தின் ரிலீசும் பல மாதங்களாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது.