கடந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போது இதுபோன்று புரமோஷன் டூர் சென்ற படக்குழு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து புரமோஷனை தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்தனர். அப்படம் ரிலீஸ் ஆன பின்னர் கூட அவர்கள் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டவில்லை. இந்த முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மட்டும் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர்.