நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர சமூக வலைதளங்களிலும் படக்குழுவினர் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றினார். அதேபோல் கார்த்தி வந்தியத்தேவன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் பெயரை மாற்றி இருந்தனர்.