கைக்குழந்தையோடு வந்த சென்னை பெண்... லக்கேஜை குடுமா நான் எடுத்துட்டுவரேன்னு சொன்ன அஜித் - என்ன மனுஷன்யா..!

Published : Apr 16, 2023, 02:35 PM IST

விமான நிலையத்திற்கு கைக்குழந்தையோடு வந்த பெண்ணின் லக்கேஜை சுமந்து சென்று நடிகர் அஜித் செய்துள்ள உதவி குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

PREV
14
கைக்குழந்தையோடு வந்த சென்னை பெண்... லக்கேஜை குடுமா நான் எடுத்துட்டுவரேன்னு சொன்ன அஜித் - என்ன மனுஷன்யா..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அஜித். ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே துவங்குவதாக இருந்தது.

24

ஆனால் கடந்த மாத இறுதியில் நடிகர் அஜித்தின் தந்தை திடீரென மரணமடைந்து விட்டதால் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைத்தனர். அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தமாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வருகிற மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34

இதனிடையே சமீபத்தில் ஏகே 62 படத்தின் பணிக்காக லண்டன் சென்றிருந்தார் அஜித். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது, தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு அஜித் செய்த உதவி தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்காக உள்ளது. அஜித் செய்த உதவி வெளியே தெரியவந்ததற்கு முக்கிய காரணம் அந்த பெண்ணின் கணவர் தான். அஜித்தின் தங்கமான மனசை பாராட்டி அவர் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு  தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆரம்பிக்கலாங்களா... ஜாலியாக டூருக்கு கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு - வைரலாகும் போட்டோஸ் இதோ

44
Ajith Kumar

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “என் மனைவி 10 மாத குழந்தையுடன் கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். தனியாக வந்த அவர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்ததும் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது என் மனைவி கைக்குழந்தையை வைத்துக்கொண்டு லக்கேஜையும் சுமந்து வந்ததை பார்த்த அஜித், அவரது லக்கேஜையும் தான் எடுத்து வருவதாக கூறி உதவியுள்ளார்.

என் மனைவி வேண்டாம் என சொல்லியும், இருக்கட்டும் மா எனக்கும் 2 குழந்தைங்க இருக்காங்க. அதனால் உங்களோட சூழ்நிலையை என்னால் உணர முடிகிறது எனக்கூறி எடுத்து வந்தாராம். அதோடு மட்டுமல்லாம் அந்த லக்கேஜ் என் மனைவியின் இருக்கையின் மேல் வைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்தபின்னர் தான் அங்கிருந்து சென்றுள்ளார் அஜித். அஜித்துடன் வந்த நபர் தலைவா நான் எடுத்துட்டு வரேன் என கேட்டும் அதை மறுத்துவிட்டாராம் ஏகே. மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஒரு நட்சத்திரம் இப்படி நடந்துகொண்டது தன்னை வியக்க வைத்தது” என அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அஜித்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அதென்ன ‘கங்குவா’..? சூர்யா 42 படத்தின் வித்தியாசமான தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா..!

click me!

Recommended Stories