அவருக்கு ஜோடியாலாம் நடிக்க முடியாது; ராஜமவுலி படத்தையே ரிஜெக்ட் பண்ணிய திரிஷா

Published : Feb 07, 2025, 11:18 AM IST

நடிகை திரிஷா பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தது ஏன் என்பதை பார்க்கலாம்.

PREV
14
அவருக்கு ஜோடியாலாம் நடிக்க முடியாது; ராஜமவுலி படத்தையே ரிஜெக்ட் பண்ணிய திரிஷா
ராஜமவுலி படத்தை நிராகரித்த திரிஷா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு தற்போது வயது 40ஐ கடந்துவிட்டாலும் இன்னும் இளமை மாறாமல் இருப்பதால் நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார். நடிகை திரிஷா கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. அதில் அஜித் ஜோடியாக அவர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தற்போது திரையரங்குகளில ரிலீஸ் ஆகி ஓடி வருகிறது. அடுத்ததாக அஜித்துடன் அவர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

24
திரிஷா கைவசம் உள்ள படங்கள்

இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல்ஹாசன் ஆகியோருடன் திரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர தெலுங்கில் விஸ்வம்பரா என்கிற திரைப்படமும் திரிஷா கைவசம் உள்ளது. இப்படி முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் திரிஷா, ராஜமவுலி இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணி உள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அது தான் நிஜம்.

இதையும் படியுங்கள்... அஜித்தை தனியே தவிக்கவிட்ட திரிஷா - வைரலாகும் விடாமுயற்சி பாடல்

34
சுனில் ஜோடியாக நடிக்க மறுத்த திரிஷா?

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு உருவான படம் மர்யாத ராமன்னா. இப்படத்தில் சுனில் நாயகனாக நடித்திருந்தார். இவர் தமிழில் மார்க் ஆண்டனி, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்தவர். இவருக்கு ஜோடியாக நடிக்க தான் திரிஷாவை அணுகி இருக்கிறார் ராஜமவுலி. மேலும் அந்த படத்திற்கு முன்னர் வரை காமெடி நடிகராகவே சுனில் பணியாற்றி வந்தார். அதனால் அவருக்கு ஜோடியாக நடித்தால் தன்னுடைய கெரியர் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நடிக்க மறுத்துவிட்டாராம் திரிஷா.

44
திரிஷாவுக்கு வாய்ப்பளிக்காத ராஜமவுலி

திரிஷா நோ சொன்னதை அடுத்து சலோனி அஸ்வானி என்பவரை ஹீரோயினாக நடிக்க வைத்து அப்படத்தை இயக்கினார் ராஜமவுலி. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் சுனிலின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது மர்யாத ராமன்னா படம் தான். தான் அழைத்தும் தன் படத்தில் நடிக்க மறுத்த திரிஷாவை அடுத்ததாக தான் இயக்கிய எந்த படத்திலும் ராஜமவுலி நடிக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories