
நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் தன்னுடைய சிறிய வயது நண்பர், நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தன்னுடைய பர்சனல் வாழ்க்கை பற்றி முதல் முறையாக கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இயக்குனர் அட்லி, இயக்கத்தில் நடிகை நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமானவர் தான் சாக்ஷி அகர்வால். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். தற்போது வரை இவரால் திரை உலகில் முன்னணி ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை.
திரைப்பட வாய்ப்புக்காக, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இந்த நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகில் அதிகம் கவனம் பெற்ற நடிகையாக மாறிய சாக்ஷி அகர்வாலுக்கு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா, அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், ராய் லட்சுமி கதையின் நாகையாக நடித்த சின்ரெல்லா, போன்ற படங்களில் நடித்தார். அரண்மனை 3 திரைப்படத்தில் சுந்தர் சி யின் மனைவியாக இவர் நடித்த கதாபாத்திரம், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
பாக்ஸ் ஆபிஸில் கில்லி போல் சொல்லி அடிக்கும் விஜய்; சொதப்பும் அஜித்! காரணம் என்ன?
பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்த சாக்ஷி அகர்வால், அவ்வபோது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சில கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதேபோல் வெள்ளி திரையை தாண்டி சின்னத்திரையிலும், அடுத்தடுத்த சில சீரியல்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென நடிகை சாக்ஷி அகர்வால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நவநீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நவநீத் சிறுவயதிலிருந்தே, சாக்ஷி அகர்வால் குடும்ப நண்பர். சாக்ஷியின் சிறுவயது நண்பரும் கூட... ஒருகட்டத்தில், இருவரும்காதலிக்க துவங்கிய நிலையில், பின்னர் பெற்றோரிடம் கூறி தற்போது திருமண உறவிலும் இணைந்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்துவேன் என அறிவித்துள்ள சாக்ஷி அகரால், திருமணத்திற்கு முன்பு சோலோவாக போட்டோ ஷூட் செய்த நிலையில்... தற்போது கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் செய்து அசர வைக்கிறார். இந்நிலையில் தன்னுடைய பேட்டியில் சாக்ஷி அகர்வால் கூறி உள்ள தகவல் ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
50 வருசமா சாப்பாடே சாப்பிடாமல் இருக்கேன்? அதிர்ச்சி கொடுத்த பழம்பெரும் நடிகை விஜயகுமாரி!
அதாவது நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும், தற்போது வரை வாழ்க்கையை துவங்கவில்லை எனக் கூறியுள்ளார். கல்யாணம் முடிந்த பிறகு நான் படத்தின் புரொமோஷனுக்காக தொடர்ந்து, அங்கும் இங்கும் சென்று வருகிறேன். அவரும் டிராவலிங் சென்றுவிட்டார். எனவே எங்களால் திருமண வாழ்க்கையை இன்னும் தொடங்க முடியவில்லை என கூறியுள்ளார். ஹனிமூன் எப்போது என கேட்டதற்கு, காதலர் தினம் வருவதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு... அதன் பிறகு ஐரோப்பா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.