Pushpa 2 The Rule Trending Number 1 on OTT Platform : அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த புஷ்பா 2 படமான ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2
Pushpa 2 The Rule Trending Number 1 on OTT Platform : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2: தி ரூல். ஒருபுறம் இந்தப் படம் சாதனை படைத்தாலும் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதியுதவி அளித்தனர்.
24
அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படம்
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் படத்தின் வரவேற்புக்கு மட்டும் குறைவில்லை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்திய அளவில் ரூ.800 கோடி வசூல் குவித்த புஷ்பா 2 படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ரூ.1800 கோடி வரையில் வசூல் குவித்தது. இதன் மூலமாக 2024ல் அதிக வசூல் குவித்த வெற்றி படமாக புஷ்பா 2 படம் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த புஷ்பா படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரையில் வசூல் குவித்தது. ஆனால், அந்த படத்தின் வசூலை விட புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 4 மடங்க அதிகம் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வசூல் மழை பொழிந்த புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
34
ஓடிடியில் நம்பர் 1 புஷ்பா 2
இப்போது ஓடிடியிலும் புஷ்பா 2 சாதனையை படைத்திருக்கிறது. அதாவது, உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 இடம் பிடித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் புஷ்பா 2 படக்குழுவினர் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளனர். அதில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த பிறகும் உலகளவில் டிரெண்டிங்கில் புஷ்பா 2 படம் என்று பதிவிட்டுள்ளனர். திரையரங்கிற்கு வந்து இந்திய ரசிகர்களை கவர்ந்த புஷ்பா 2 இப்போது ஓடிடியில் வெளியானதன் மூலமாக சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் மூவி ஆர்வலர்களால் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
44
உலகளவில் நம்பர் 1 இடம் புஷ்பா 2
ந்தப் படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பெண் வேடமணிந்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதோடு அதே உடையில் ஆக்ஷன் காட்சியிலும் அசத்தியிருப்பார். படம் மட்டுமின்றி புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டது. பீலிங்ஸ் பாடல் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் ஆக உருவெடுத்தது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகபதி பாபு, சுனில், ஆடுகளம் நரைன், ஆதித்யா மேனன், மைம் கோபி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் 3ஆவது பாகம் வெளியாகும் என்று தெரிகிறது.